

நடிகை சமந்தா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கென்ற ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.அந்த வகையில் தமிழ் சினிமாவை போலவே தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக நடிகை சமந்தா விளங்குகிறார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் 6-ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்தே காதலித்து வந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் செட்டில்லாகி விட்டனர்.


மேலும் தொடர்ந்து தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, கடைசியாக தமிழில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கி, விஜய் சேதுபதி நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வருகிறார், மேலும் இப்படத்தில் நடிகை நயன்தாராவும் நடித்து வருகிறார்.


சமந்தா எப்போதும் இன்ஸ்டாகிராமில் அக்டிவேட்-டாக இருப்பவர். அவ்வப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு குறும்புத்தனமாகவும், தைரியமாகவும் பதில் அளித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா, கோடைகாலத்திற்கு ஏற்ற புடவையை ஒன்றை அணிந்திருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.


ஹவுஸ் ஆஃப் த்ரீ ஸ்டுடியோவில் இருந்து ஒரு பட்டு ஆர்கன்சா எம்பிராய்டரி புடவையை நடிகை காட்டியுள்ளார். அதில் மென்மையான டயாபனஸ் சீக்வின்கள், பூக்கள், மீன் உருவங்கள் என பல்வேறு டிசைன்கள் கையால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது மற்றும் சமந்தா அதற்கேற்றவாறு ஒரு ரவிக்கையும் அணிந்துள்ளார்.


நடிகை சமந்தா தனது சமீபத்திய OTT படங்களை விளம்பரப்படுத்துவதில் மும்முரமாக உள்ளார், இதனால் அவ்வப்போது அவரது புகைப்படங்களை வெளியிட்டு படத்தின் தகவல்களை கூறி வருகிறார். முன்னதாக கிளாமர் உடை அணிந்து கருப்பு வெள்ளை கவர்ச்சியில் இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார். ஆனால் இப்போது, சமந்தாவின் சமீபத்திய புடவை தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் திகைத்துப்போயுள்ளனர். மேலும் பன் ஹேர் ஸ்டைல் மற்றும் வெள்ளை நிற பூக்களும் வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் எண்ணற்ற லைக்குகள் மற்றும் கமெண்ட்ஸ்களையும் பெற்று வருகிறது.


இதனிடையே சகுந்தலை புராண கதை சினிமா படமாக தயாராகிறது. படத்துக்கு சகுந்தலம் என்று பெயரிட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை குணசேகர் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் பூஜையுடன் தொடங்கியது. இதில் பேசிய நடிகை சமந்தா, “சினிமாவில் நான் இதுவரை 50 படங்களில் நடித்துள்ளேன். வில்லி, ஆக்ஷன் நாயகி என பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருக்கிறேன். ஆனால் சரித்திர படத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. தற்போது அது நிறைவேறி உள்ளது. இத்தகைய கனவு வேடம் கிடைக்க எனக்கு 10 வருடங்கள் ஆகியுள்ளது என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.