கிக் பாக்ஸிங்கில் சாதனை வீராங்கனையாக திகழ்ந்த ரித்திகா சிங், தமிழில் நடிகர் மாதவனுடன் சேர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படத்தில் நடித்து சினி உலகிற்கு நடிகையாக அறிமுகம் ஆனார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் கிக் பாக்ஸரும், நடிகையுமான ரித்திகா சிங் தனது முதல் திரைப்படமான "இறுதி சுற்று" படத்திலும் கிக் பாக்ஸராகவே நடித்து லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானம் பெற்றார்.
நடிகர் ராகவா லாரன்ஸுடன் இணைந்து சிவலிங்கா திரைப்படத்திலும், அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்திலும் நடித்துள்ளார். கிக் பாக்ஸிங்கில் தொழில்முறை சாம்பியனாக இருந்தாலும், நடிகையான பின்னர் தனது அட்டகாசமான ஸ்டைல் மற்றும் ஃபேஷன் லுக்கில் ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ்களை கொண்டுள்ள பாக்ஸரும், நடிகையும ரித்திகா சிங் மாடர்ன் உடைகளில் கலக்கினாலும் பாரம்பரிய உடையான சேலை மற்றும் பிற உடைகளிலும் கிளாமர் மற்றும் ஃபேன்ஸி லுக்கில் அசத்துகிறார்.