ஆண்ட்ராய்டு காலத்தில் அனைவரும் கைகளிலும் ஸ்மார்ட்போன் உள்ளது. எனவே எங்கு சென்றாலும் ஏதாவது ஒரு மூலையில் நின்று கொண்டு செஃல்பியோ, குரூப் போட்டோவோ எடுத்துக் கொண்டிருப்பவர்களை நிறைய இடங்களில் பார்க்கலாம். அப்படி போட்டோ எடுக்கும் போது அதற்கு ஏற்றார் போல் போஸ் கொடுக்க தனி திறமை வேண்டும். போட்டோ எடுப்பது கலையாக இருந்த காலம் மாறி, தற்போது போட்டோவிற்கு போஸ் கொடுப்பது என்பது மிகப்பெரிய கலையாக மாறிவிட்டது.
இன்ஸ்டாவில் லைக்குகளை குவிக்கும் படியான போஸ்களை கொடுப்பது என்பது சாமானியமானது அல்ல. திரைப்பிரபலங்களைப் பொறுத்தவரை தீபிகா படுகோனே முதல் நம் ஊர் நயன்தாரா வரை அவர்கள் கொடுக்கும் ஒற்றை போஸ்கள் சோசியல் மீடியாவை திண்டாட வைக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றன. அந்த அளவுக்கு எல்லாம் கூட வேண்டாம், செல்போன் கேமரா முன்னால் நின்று ஸ்டைலாக போஸ் கொடுப்பது எப்படி என தெரிந்துகொண்டால் மட்டும் போதும் என்பவர்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள போஸ்களை ட்ரைப் பண்ணிப்பாருங்க...
1. இடுப்பில் கைவைப்பது: (ஹேண்ட்ஸ்-ஆன் ஹிப்ஸ்):
வழக்கமான போட்டோ எடுக்கும் போஸ்களில் இதுதான் முதன்மையானதாக உள்ளது. இந்த போஸை பொதுவாக போட்டோகிராபர்கள் பெண் மாடல்களை போட்டோ எடுக்க அதிகம் பயன்படுத்துகின்றனர். கைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி இடையை மெலிதாக காட்டுகிறது, மேலும் பெண்ணின் நம்பிக்கை மற்றும் வலிமையை வெளிக்காட்டக்கூடியது. இதேபோஸில் தோள்களை கொஞ்சம் முன்னேக்கி தள்ளி நின்றால், அந்த போஸ் உங்களை மேலும் கெத்தாக காட்ட உதவும்.
2. கையை முன்னோக்கி வைப்பது:
தீபிகா படுகோனேவைப் போல் உங்கள் கைகளை முன்னால் வைத்து கொடுக்கும் போஸ், டிரெடிஷ்னல் முதல் கார்ப்ரேட் மாடலிங் போட்டோ ஷூட்கள் வரை பிரபலமானது. உடலை சற்றே வளைத்து, கைகள் இரண்டையும் முன்னால் கொண்டு வந்து கேமராவை சற்றே தள்ளி எதிர்கொள்ளுங்கள். இந்த போஸ் உங்களை கவர்ச்சிகரமாகவும், உடல்வாகை ஒல்லியாகவும் காட்ட உதவும்.
3. கன்னத்தை கீழே இறக்கி, நேர்கொண்ட பார்வை:
முகத்தை கொஞ்சம் முன்னே நீட்டி, கன்னத்தை சற்றே கீழே சாய்த்து, கண்ணை நேராக கேமரா லென்ஸை நோக்கி பாருங்கள். இந்த போஸ் உங்களை மிடுக்காவும், ஆளுமை மிக்கவராகவும் காட்ட உதவும். முழு நீளம் அல்லது ஆப் ஸ்கேப் போட்டோ என இரண்டிற்குமே இந்த போஸ் சிறப்பானதாக இருக்கும்.
5. மறைமுகப் பார்வை:
போட்டோ என்றாலே தோளை நேராக வைத்து, தலையைத்தூக்கி, விரைப்பாக கேமராவைப் பார்த்து, சிரிப்பே வரமால் சிரிக்க வேண்டும் என்ற பழைய பாணி எல்லாம், தற்போதைய இன்ஸ்டாகிராம் தலைமுறைக்கு ஒத்துவராது. கையில் ஒரு புத்தகத்தையோ, காபி குவளையையோ வைத்துக்கொண்டு அசால்ட்டாக எங்கோ பார்ப்பது போல் போஸ் கொடுப்பதும் அழகாக தான் இருக்கும்.
6. முகத்தில் கைவைத்த படி:
குளோஸ் போட்டோவிற்கு ஏற்ற கெத்தான போஸ் இது. உங்கள் கையையும், விரல்களையும் முகத்தின் விரும்பும் கோணத்தில் எல்லாம் வைத்து போட்டோ எடுக்கலாம். இது டிரெடிஷ்னல் முதல் மார்டன் வரை அனைத்து வகையான உடை மற்றும் பின்னணிக்கு ஏற்றதாக இருக்கும். உதாரணமாக உங்கள் கையை கன்னத்தில் வைப்பதை விட, விரலை உதட்டின் மீது வைத்து போஸ் கொடுத்தால் கூடுதல் லைக்குகள் கிடைப்பது உறுதி.