

எந்த பண்டிகை வந்தாலும் புத்தாடை உடுத்தினாலும் பொங்கலுக்கு வாங்கி அணியும் மகிழ்ச்சி வேறெதிலும் இருக்காது. பொங்கல் தமிழர் திருநாள் என்பதால் கலாச்சார அடிப்படையில் ஆடை அணிந்து அலங்காரம் செய்வதுதான் இதன் தனிச்சிறப்பு. அப்படி இந்த பொங்கலுக்கு நீங்கள் டிரெடிஷ்னலாகவும் டிரெண்டாகவும் தெரிய சூப்பரான சில டிப்ஸ் உங்களுக்காக....


லாங் கவுன் : சமீப காலமாக கால் பாதம் வரை தொடும் அளவிலான லாங் கவுன்கள் அணிவதுதான் புது டிரெண்ட். அதை நாம் செய்யும் அலங்காரத்தைப் பொருத்து வெஸ்டர்னாகவும் மாற்றலாம் டிரெடிஷ்னலாகவும் மாற்றலாம். அப்படி இந்த பொங்கலுக்கு நல்ல வைப்ரண்ட் நிறத்தில் ஆடையை தேர்வு செய்து அதற்கு டிரெண்டிஷ்னல் முறையில் ஜிமிக்கி , வலையல், சோக்கர் நெக்லஸ் என அணியலாம். ஹேர் ஸ்டைல் விதவிதமாக பிண்ணி கொண்டை போட்டு அதில் மல்லிகைப்பூவை சுற்றிவிடுங்கள். நல்ல ஹீல்ஸ் அணிந்துகொள்ளுங்கள். அவ்வளவுதான் ஊர் கண்கள் அத்தனையும் உங்கள் மீதுதான்...(Image source : dreamingloud.com)


புடவை / தாவணி : தமிழ் கலாச்சாரம் என்றாலே புடவையும் தாவணியும்தான். அதுவும் பொங்கலில் இவை இரண்டையும் தவிர்க்க முடியுமா..? எனவே இதுவரை நீங்கள் புடவை அல்லது தாவணி கட்டியதில்லை எனில் இந்த பொங்கலில் அந்த ஆசையை தீர்த்துவிடுங்கள். புடவையிலேயே பல டிசைன்கள், குறிப்பாக பிளவுஸ் தைப்பதில் எண்ணற்ற வகைகள் வந்துவிட்டன. எனவே புடவைதானே என்று சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். இதைவிட சிறந்த டிரெடிஷ்னலான அதேசமயம் டிரெண்டியான உடை இருக்க முடியாது. இதற்கும் டிரெடிஷ்னல் நகைகள் அணிந்து , பிண்ணல் பின்னி பூ வைத்து சூப்பராக அசத்திவிடுங்கள்.(Image source : dreamingloud.com)


பலாசோ மற்றும் கிராப் டாப் : பலாசோ என்பது வர்சடைல் உடை எனலாம். எப்படி வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் மேட்ச் செய்துகொள்ளலாம். குறிப்பாக சௌகரியமான உடைக்கு கியாரண்டி. எனவே இந்த பொங்கலுக்கு டிரெடிஷ்னலாக கோல்ட் நிற பார்டர், கற்கள் , பூ டிசைன் என வடிவமைக்கப்பட்ட பேண்ட் மற்றும் ஜரிகை, சில்க் துணியில் தைக்கப்பட்ட கிராப் டாப்பையும் மேட்ச் செய்து அணியுங்கள். பர்ஃபெக்ட் காம்போவாக இருக்கும். இதற்கு ஏற்ப டிரெண்டிஷ்னல் அணிகலன்களை அணிந்துகொள்ளுங்கள்.(Image source : dreamingloud.com)


கிராப் டாப் மற்றும் ஸ்கர்ட் : இந்த காம்போவோம் கிட்டதட்ட பலாசோ டைப்தான். இதையும் பொங்கலுக்கு முயற்சி செய்து பாருங்கள். தூள் கிளப்புங்கள்.(Image source : dreamingloud.com)


சுடிதார் அல்லது குர்தா : சுடிதார், குர்தா தான் அணிவேன் என்றால் அதிலும் டிரெடிஷ்னல் வகைகள் உள்ளன. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து அணியலாம். சிம்பிளாக இருந்தாலும் இந்த ஆடைக்கு கிராண்ட் லுக் தருவது நீங்கள் அணியப்போகும் அணிகலன் மற்றும் மேக்அப் இல் தான் உள்ளது. எனவே அதில் சமரசம் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.(Image source : dreamingloud.com)