பட வாய்ப்புகளுக்காக உடல் எடையைக் குறைத்துக்கொண்டபின் அவர் கலந்துகொள்ளும் முதல் நிகழ்ச்சி இது எனலாம். மெலிந்த உடலமைப்பிற்கு ஏற்ப அவர் தேர்வு செய்த புடவை அவருக்கு கனக்கச்சிதமாகப் பொருந்தியுள்ளது. கருப்பு வெள்ளையில் அவர் அணிந்திருந்த புடவைக்கு ஏற்ப மேக் அப்பிலும் கருப்பு வெள்ளை காலகட்ட தீமை பின்பற்றியுள்ளார்.
ஜொலிஜொலிக்கும் வெள்ளைக் கற்கள் பதிக்கப்பட்டு கருப்பு நிற ப்ளீட்ஸ் வைத்த புடவை அவரின் அழகை மிகைப்படுத்திக் காட்டுகிறது. புடவைக்கு ஏற்ப 70 - 80 களின் மேக் அப்பை அழகாக அப்ளை செய்துள்ளார். பிரைட் மேக் அப் அப்ளை செய்து அதற்கு காண்ட்ராஸ்டாக சிவப்பு நிற லிப்ஸ்டிக் அப்ளை செய்துள்ளார். லிப்ஸ்டிக்கிற்கு ஏற்ப ஹேர் ஸ்டைலில் வலது புற இடையே பூ வைத்திருப்பது அழகாக எட்டிப்பார்க்கிறது. கழுத்தை ஒட்டிய ஜாக்கெட்டிற்கு பொருத்தமான ஹை பன் ஹேர் ஸ்டைல் அம்சமாக உள்ளது.
இவை மட்டுமல்லாது அணிகலன் விஷயத்திலும் புடவையை மிகைப்படுத்த அணிகலன்களை எளிமையாக தேர்வு செய்துள்ளார். காதோடு ஒட்டிய கற்கள் பதித்த ஸ்டட், ஸ்டார் மோதிரம் மட்டுமே அணிந்து மிக எளிமையான தேர்வாக இருக்கிறது. கால்களுக்கு கருப்பு நிற ஷூ அணிந்திருப்பது அத்தனை பொருத்தமாக இல்லை. காண்ட்ராஸ்டாகவோ, வித்யாசமாகவோ இருந்திருந்தால் இன்னும் கவனம் ஈர்த்திருக்கலாம். நெயில் பாலிஷும் சிவப்பு நிறத்தில் அப்ளை செய்திருப்பது சிறப்பு.