23 வயதான மானசா தெலுங்கானா ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். இவர் பொறியியல் பட்டம் பெற்ற மாணவி. அதோடு டிசம்பர் மாதம் நடக்கவிருக்கும் 2021 ஆண்டிற்கான உலக அழகிப் போட்டிக்கு இந்தியாவைப் பிரதிநித்துவப்படுத்தி பங்கேற்கவுள்ளார். மானசா தற்போது நிதி தகவல் பரிமாற்ற ஆய்வாளராக ( financial information exchange analyst ) பணியாற்றி வருகிறார்.