2022 உலகக்கோப்பை ஃபுட்பால் போட்டி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா போன்ற நாடுகளில் புட்பால் விளையாடப்படுவதில்லை என்றால் கூட, ஃபுட்பால் வீரர்களுக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. அதிலும், விளையாட்டு வீரர்கள் என்றாலே உயரம், கட்டுமஸ்தான உடல், மற்றும் ஃபிட்னஸ் என்று இருப்பார்கள். கால்பந்து வீரர்கள் என்றால் கேட்கவே தேவையில்லை! உலகம் முழுவதும் ரசிக ரசிகைகளைப் பெற்றிருக்கும் மிக ஹேண்ட்ஸம் ஆன புட்பால் வீரர்களின் பட்டியல் இங்கே!
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ: கால்பந்து வீரர் என்று சொன்னாலே கால்பந்து போட்டியைப் பற்றி தெரியாதவர்களுக்கு கூட கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி தெரியாமல் இருக்க முடியாது. குறிப்பாக கால்பந்து என்று சொன்னாலே, ரொனால்டோ என்று நினைக்கும் அளவுக்கு மிகச்சிறந்த வீரர். போர்ச்சுகல் நாட்டைச் சார்ந்த 37 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
சார்மிங்கான இங்கிலாந்து வீரர் டேவிட் பெக்ஹாம் :காலம் முழுவதும் ஒரு சிலரின் புகழ் அழியாது என்பது விளையாட்டு வீரர்களுக்குப் பொருந்தும். அது முன்னாள் இங்கிலாந்து கால்பந்து வீரரான, சார்மிங்கான இளவரசர் போலத் தோற்றமளிக்கும் டேவிட் பெக்ஹாமுக்கும் நன்றாகவே பொருந்தும். விளையாட்டில் இவரின் திறன், சாதனைகள் மட்டுமல்லாமல், மற்ற பிரபலங்களைப் போல இல்லாமல், இவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும் வெளிப்படையாக இருந்தார், இருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜாமி ரெட்நாப் : இங்கிலாந்து நாட்டில் பல பிரபலமான விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். 90களில் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் ஹீரோவாக திகழ்ந்தவர், ஜாமி. ஓய்வு பெற்ற பிறகும், ரசிகர்களுக்கு ஜாமி மீதான ஈர்ப்பு குறையவில்லை. ஹேண்ட்சம் தோற்றத்தில் தனது குழந்தையுடன் இவர் பகிர்ந்த புகைப்படம் வைரலாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.