நாடு முழுவதும் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகையாகம். பட்டாசு, விதவிதமான உணவு வகைகள், தின்பண்டங்கள் என்று கொண்டாட்டங்கள் நிரம்பி இருந்தாலும், தீபாவளி பண்டிகைக்காக வாங்கப்படும் ஆடைகள் எல்லோருக்கும் ஸ்பெஷல் தான். தீபாவளி வரப்போகுது, எப்போ புது டிரஸ் வாங்க போகலாம் என்பதில் தொடங்கி, புதுசா என்ன டிரஸ் அல்லது கலெக்சன் வந்திருக்கு என்பது வரை, பலரின் ஆசையும் தீபாவளிக்கு அழகழகான ஆடைகளை வாங்கி அணிந்து மகிழ்வது தான். தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், இன்னும் என்ன ஆடைகள் வாங்குவது என்று தேர்வு செய்யமுடியாமல் இருந்தால், இதோ இந்த ஸ்பெஷல் ஆடைகளின் பட்டியல் உங்களுக்காக.
V-கழுத்து குர்தி : பாரம்பரிய ஆடையும், மேற்கத்திய வடிவமைப்பும் கலந்து ஃபியூஷன் ஆடையாக, நீங்கள் V வடிவ கழுத்துள்ள குர்த்தியை அணிந்து இந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள். இந்த வகையான குர்த்திகள் பொதுவாக நீளமாக இருக்கும். எனவே, நீங்கள் லெக்கின்ஸ் அல்லது ஸ்கர்ட் அல்லது எந்த வகையான பாட்டம்களையும் அணியலாம்.
க்ராப்-டாப் மற்றும் பலாசோ : இந்த ஆண்டு தீபாவளிக்கு அதிகமாக விற்பனையானது, பலாசோ மாடல் பேன்ட்டுகள் மற்றும் பலாசோ குர்தி செட்கள் தான். எல்லாரும் தான் பலாசோ மாடல் அணிகிறார்களே, நீங்கள் கொஞ்சம் வித்தியாசமாக அணியலாமே! உங்கள் தீபாவளியை, க்ராப்-டாப் மற்றும் பலாசோ செட் அணிந்து கொண்டாடுங்கள். சமீப காலமாக, க்ராப்-டாப் அனைவராலும் விரும்பப்படும் ஆடையாக இருக்கிறது. அது மட்டுமின்றி, க்ராப்-டாப் அணிவது உங்கள் தோற்றத்தை மேம்படுத்திக் காட்டும். வேலைப்பாடுள்ள க்ராப்-டாப் மற்றும் பலாசோ செட் அணிந்து, இந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
சீரற்ற குர்தா செட் (Asymmetry) : சல்வார் அல்லது குர்தியின் முன்பக்கம் ஏற்றமாகவும், பின்பக்கம் இறக்கமாகவும் உள்ளது, சரியாகவே இல்லை என்று வருத்தப்பட்ட காலம் போய், தற்போது, அதுவே ஒரு தனித்துவமான மாடலாக வெளிவந்து இளம் பெண்கள் பலரும் விரும்பும் ஆடையாக மாறியுள்ளது. உங்கள் பண்டிகை அலங்காரத்தை, பளபளப்பான அசிமெட்ரி குர்தி செட் அணிந்து முழுமையாக்குங்கள். நீங்கள் Asymmetry டாப் அல்லது குர்தி மட்டும் தனயே வாங்கினால், அதற்கு பொருத்தமாக பென்சில் பேன்ட்டுகளை அணியுங்கள்.
கஃப்தான் குர்தி செட் : சில மாதங்களுக்கு முன்னர், பெண்கள் மத்தியில் கஃப்தான்கள் மிகவும் பிரபலமாகின. அதையொட்டி இந்த ஆண்டு, கண்ணைப்பறிக்கும் வேலைப்பாடுகள், அழகான டிசைன்கள், நேர்த்தியான வடிவைமைப்பு, வண்ணங்கள் என்று கஃப்தான்கள் சந்தையில் கிடைக்கின்றன. மெல்லிய சரிகை அல்லது எம்பிராய்டரி செய்யப்பட்ட கஃப்தான்கள் மற்றும் பொறுத்தமான கணுக்கால் வரை நீளும் பேன்ட்டுகள் அணிந்து இந்த தீபாவளியைக் கொண்டாடுங்கள்.