இந்தி திரைப்படங்களின் முன்னணி நடிகையான கிருத்தி சனோன் தெலுங்கில் நெநோக்கடனின் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். இப்படம் தமிழில் நம்பர் 1 என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது. தன்னுடைய கவர்ச்சிக்கரமான அழகினால் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்து நின்ற இவர், ஹிந்தியிலும் கொடி கட்டி பறந்தார். சபீர் கானிக் ஹீரோபண்கி படத்தில் சிறந்து நடித்தமையால் ஃபிலிம்பேர் விருதையும் பெற்றார். சமீபத்தில் ஸ்டைல்லான உடையில் ரசிகர்களுக்கு 'பரா பரா பரம சுந்தரி பாடல் நாயகி' என்ன மாதிரியான உடையை அணிந்திருந்தார் என இங்கே தெரிந்துக் கொள்வோம்.
எம்ப்ராய்டு லெஹங்கா : பண்டிகை நாள்கள் என்றாலே பராம்பரிய ஆடையில் வலம் வர வேண்டும் என்பது தான் அனைவருக்கும் பிடிக்கும். இதேப்போன்று தான் நடிகை கிருத்தி சனோனும் தீபாவளிக்கு அழகான லெஹங்கா ஒன்றை அணிந்திருந்தார். இளஞ்சிவப்பு நிறத்தில் எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்ட லெஹெங்காவுடன் வி-ஷேப் நெக்லைன் மற்றும் துப்பட்டா அணிந்திருந்தார். இதோடு இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய ஜிமிக்கி அணிந்திருந்தது இவரை மேலும் அழகாக்கியது.