ஒரு சில நடிகர், நடிகைகளை பார்க்கும்போது, இந்த வயதிலும் இப்படி ஒரு அழகா ; இவருக்கு வயதே ஆகாதா ; வயதாக வயதாக அழகு கூடிக்கொண்டே போகிறது என்று தோன்றும்! அவர்களில் ஒருவர்தான் பாலிவுட்டை கலக்கிய நடிகை கஜோல் தேவ்கன். தான் நடித்து ரிலீசுக்குக் காத்திருக்கும் திரைப்படமான சலாம் வெங்கியின் ப்ரோமோஷன் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படியான ஒரு நிகழ்வில், இவர் மெரூன் நிற லெஹெங்காவில் அட்டகாசமான தோற்றத்தில் காண்பவரை அனைவரையுமே வியந்துபோகும் அளவுக்கு காட்சியளித்திருக்கிறார்.
தமிழில் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பெற்றவர் நடிகை கஜோல் என்பது குறிப்படத்தக்கது. பாலிவுட்டில் முடி சூடா ராணியாக வலம் வரும் கஜோலுக்கு இரண்டு டீனேஜ் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடியாது. இந்தி திரையுலகத்தின் ஸ்டீரியோடைப்பை உடைத்த நடிகைகளில் கஜோலும் ஒருவர். ஒவ்வோர் ஆண்டும் இவருக்கு வயது குறைந்து கொண்டே செல்கிறதோ அல்லது ஆண்டுகள் மட்டும் கடக்கின்றன; இவர் அப்படியேதான் இருக்கிறார் என்று நினைக்கும் படி, ஒவ்வொரு முறை இவர்.
அது மட்டுமில்லாமல், கஜோல் இளம் நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு தனித்துவமான, அட்டகாசமான ஆடை அலங்காரத்தில் வலம் வருகிறார். வழக்கமாக பொது இடங்களில், நிகழ்ச்சிகளில் சிவப்பு நிற ஆடைகளை அதிகம் அணியும் கஜோல், இந்த முறை பட ப்ரமோஷனுக்காக பிரவுன் நிற ஆடையை தேர்வு செய்துள்ளார். பொதுவாக கொஞ்சம் வெளிர் நிற ஸ்கின் டோன் கொண்டவர்களுக்குதான் பிரவுன் நிறம் நன்றாக இருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால், கஜோல் அதை பொய்யாக்கிவிட்டார். இவருடைய சரும நிறத்துக்கு, பொலிவுக்கு பிரவுன் நிற ஆடையும் அட்டகாசமாக பொருந்தும் என்பதை இந்த புகைப்படங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மெரூன் நிற லெஹங்கா மற்றும் ஸ்டேட்மென்ட் ஜுவல்லரி : முழுவதுமாக பிளைன் நிற லெஹங்கா ஸ்கர்ட், சின்ன சின்ன எம்பிராய்டரி டிசைன் கொண்ட மெல்லிய துப்பட்டா மற்றும் வேலைபாடுகள் கொண்ட சோளியில் கஜோல் தேவதையாக ஜொலிக்கிறார். சோளியில், பளபளக்கும் எம்பிராய்டரி மற்றும் ஜரிகை வேலைபாடுகள் உள்ளன. ஆழமான V வடிவ கழுத்து கண்களுக்கு உறுத்தாத கவர்ச்சியாக, நேர்த்தியாக பொருந்துகிறது. ஆடையை, நிறத்தை மட்டும் சரியாக தேர்வு செய்தால் போதுமா? அதற்கு கச்சிதமாக பொருந்துவது போல நகைகளையும் அணிய வேண்டும்.
ஆடையின் நிறத்துக்கு மேட்ச்சாக கடா என்று கூறப்படும் கனமான வளையல்கள் : எப்போதுமே நகைகளைப் பொறுத்தவரை, காதணிகள் பெரிதாக அணிந்தால், கழுத்தில் சின்னதாக செயின் மட்டும் போட்டால் போதும். அதே போல, கழுத்தில் நிறைய அல்லது அலங்கராமான பெரிய நகையை அணிந்தால், காதணிகள் தேவைப்படாது. ஸ்வரோவ்ஸ்கி கற்களும், முத்துக்கள் தொங்கும் கழுத்தை ஒட்டிய நெக்லஸ் அணிந்துள்ளார்.