என்றைக்காவது நீங்கள் வாங்கும் உள்ளாடைகள் காலாவதி தேதிக்கு முன்னரே ஏன் காலாவதியாகின்றன என்று யோசித்ததுண்டா..? என்னதான் அதிக விலை கொடுத்து , பெஸ்ட் பிராண்டுகளில் உள்ளாடைகள் வாங்கினாலும் அதை சரியாகப் பராமரிக்கவில்லை எனில் அது சில நாட்களிலேயே காலாவதியாகிவிடும். குறிப்பாக அவற்றைத் துவைக்கும் முறை தவறாக இருந்தால் விரைவில் கலர்மங்கி, எலாஸ்டிக் பிஞ்சு , கொக்கிகள் அறுந்துவிடும். சரி எப்படிதான் பராமரிப்பது.?
உள்ளாடைகளை துவைக்கும்போது பலரும் செய்யும் தவறு சுடுதண்ணிரில் துவைப்பதுதான். அப்படி துவைப்பதால் அழுக்குகள் நீங்கி சுத்தமாகும் என்று நினைக்கின்றனர். ஆனால் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டுமெனில் சாதாரண குளிர்ந்த நீரில்தான் துவைக்க வேண்டும். சுடு தண்ணீரில் துவைக்கும் போது உள்ளாடையின் எலாஸ்டிக் இலகுவாகி, நிறம் மங்கும். துணியும் கொஞ்ச நாளில் மங்கி விடும்.
உள்ளாடைகளை காய வைக்கும் போது நல்ல காற்று , வெயில் படும் படி காய வையுங்கள். நீண்ட நேரம் காய வைக்காமல் உடனே எடுத்துவிடுவது நல்லது. வெயிலில் நீண்ட நேரம் காய்ந்தாலும் எலாஸ்டிக் இலகுவாகும். பிராவை காய வைக்கும்போது கிளிப்புகளின்றி கொக்கிகளை மாட்டி தொங்க விடாமல் அப்படியே கிளிப்புகள் பயன்படுத்தி காய வையுங்கள்.