ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

பீரோவில் உள்ள ஆடைகள் குறிப்பாக விலை அதிகமான பட்டுப்புடவைகள் ஈரம் ஊறி பூஞ்சைகள் பிடிக்கும். அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் பாழாகிவிடும்.

 • 15

  குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

  க்காலம் அல்லது குளிர்காலங்களில் எப்போதும் சுவர்கள், மரச்சாமான்களில் ஈரம் இருக்கும். இதனால் பொருட்களும் ஈரப்பதத்துடன் இருப்பதால் பூஞ்சைகள் பிடிப்பது, துர்நாற்றம் வீசுவது என இருக்கும். அப்படி பீரோவில் உள்ள ஆடைகள் குறிப்பாக விலை அதிகமான பட்டுப்புடவைகள் ஈரம் ஊறி பூஞ்சைகள் பிடிக்கும். அதை நாம் சரியாக பராமரிக்காமல் விட்டால் பாழாகிவிடும். எனவே பட்டுப்புடவையை பராமரிப்பதற்கான டிப்ஸ் இங்கே...

  MORE
  GALLERIES

 • 25

  குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

  பிளாஸ்டிக் கவர்களுக்குள் வைக்கக் கூடாது : பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் செய்யும் தவறுதான் இந்த பிளாஸ்டிக் பைகளில் பட்டுப்புடவையை வைப்பது. பிளாஸ்டுக் கவர்கள் ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது. எனவே அந்த ஈரம் துணிகளும் உறிஞ்சும். அதோடு காற்றோட்டாம் இல்லாமையால் சரிகை கருத்துவிடும். எனவே கற்கள், சரிகை கொண்ட புடவை அல்லது ஆடைகளை பிளாஸ்டிக் பைகளில் வைக்காமல் பருத்தி பைகளிலோ அல்லது பருத்தி துணிகளிலோ வைத்து சுற்றி வையுங்கள்.

  MORE
  GALLERIES

 • 35

  குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

  புரோட்டீன் ஷாம்பூ அல்லது ஒயிட் வினிகர் : பட்டுப்புடவையை விசேஷங்களுக்கு கட்டிச் சென்றால் வீட்டிற்கு வந்ததும் அதை உடனடியாக குளிர்ந்த நீரில் அலசி எடுக்க வேண்டும். பின் அதை ஊற வைக்க நீரில் ஒயிட் வினிகர் அல்லது புரோட்டீன் ஷாம்பூ கலந்துவிட்டு புடவையை 3-5 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரில் மீண்டும் நன்கு அலசி எடுக்கவும். நன்கு பிழிந்துவிடாமல் மேலோட்டமாக தண்ணீரை உலர்த்தி பின் காய வையுங்கள்.

  MORE
  GALLERIES

 • 45

  குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

  ஹேங்கர் பயன்படுத்தவும் : பட்டுப்புடவையை மடித்து வைப்பதை விட பீரோவின் ஹேங்கரில் தொங்கவிடுவது நல்லது. அதோடு அவ்வப்போது எடுத்து மாற்றி மாற்றி மடித்து வைக்க வேண்டும். இல்லையெனில் ஒரே மடிப்பில் இருந்தால் அப்படியே கோடு விழும். மெட்டல் ஹேங்கரை விட பிளாஸ்டிக் ஹேங்கர் பயன்படுத்துவது நல்லது.

  MORE
  GALLERIES

 • 55

  குளிர்காலத்தில் ஈரம் ஊறி பட்டுப்புடவைகளில் பூஞ்சை பிடிக்கிறதா..? பராமரிப்பதகாக டிப்ஸ்..!

  சிலிக்கா ஜெல் பயன்படுத்துங்கள் : ஜூ , பேக் அல்லது எலக்ட்ரானிக் பொருட்கள் வாங்கினால் அதனுள் ஒரு சின்ன பாக்கெட் போல் இருக்கும். அதை தூக்கி எறியாமல் பத்திரப்படுத்தி வையுங்கள். அது ஈரத்தை உறிஞ்சும் சிலிக்கா ஜெல் கொண்ட பாக்கெட். அதை பிரோ போன்ற ஈரம் உறிஞ்சும் இடங்களில் வைத்தால் ஈரம் ஊறாது. பொருட்களும் பாழாகாது.

  MORE
  GALLERIES