

ரம்ஜானுக்கு அணியும் ஆடைகள் எப்போதுமே பிரமாண்டம் நிறைந்ததுதான். அவர்களின் விருப்பமும் அதிக வேலைபாடு கொண்டதாக இருக்க வேண்டும் என்பதுதான். அந்த வகையின் தற்போது எந்த ஆடைகள் டிரெண்டில் உள்ளது என்று பார்க்கலாம்.


அசமிட்ரிகல் குர்தா: தற்போது குர்தாவிலேயே பல வகைகள் வந்துவிட்டன. அதில் இந்த வரைமுறையற்ற கட்டிங்கில் வரும் குர்தாக்கள்தான் பிரபலம். இதிலேயே ஹெவி ஒர்க்குகள் கொண்ட ஆடைகளும் கிடைக்கின்றன. டிரை பண்ணி பாருங்க.


முழு நீள குர்தா : கால் வரை நீளமாக அதுவும் அதிக வேலைபாடுகள் கொண்ட குர்தாக்களும் தற்போது டிரெண்ட். இதை பலர் தங்களுக்கு பிடித்த வகையில் டிசைன் செய்து வாங்கி அணிகின்றனர்.


லெஹங்கா : எந்த கலாச்சார பண்டிகைகளிலும் இந்த லெஹங்கா இடம் பெறுகின்றன. அந்த வகையில் இந்த ரம்ஜானுக்கும் அணிந்து அசத்துங்கள்.


ஷராரா சூட் : பாட்டம் ஆடையின் முடியில் ஃப்ளீட்ஸ் கொடுக்கப்பட்டு வடிவமைத்திருக்கும் இந்த உடைகளும் ரம்ஜானுக்கு ஏற்ற உடை.