காலேஜ் முதல் அலுவலகம் வரை செல்லும் அனைத்து பெண்களுக்கும் ஏற்ற உடையாக தற்போது குர்தி விளங்குகிறது. பெண்களின் உடல் அமைப்பு மற்றும் வயதுக்கு ஏற்றார் போல் வித விதமான டிசைன்கள், வெரைட்டியான கலர்களில் குர்தாக்கள் கடைகளில் கிடைக்கின்றன. அங்கிரக குர்தி, ஸ்மார்ட் குர்தி, கீஹோல், பெல் ஸ்லீவ்ஸ், லேயர்டு குர்தி, ஷர்ட் ஸ்டைல், ஏ-லைன், அனர்கலி, ஹை லோ ஸ்டைல், பாக்கெட் ஸ்டைல், கோட் ஸ்டைல், போஞ்சோ-ஸ்டைல், டபுள் குர்தி, ஃபிரண்ட் ஓபன், சைடு ஓபன் என நூற்றுக்கும் மேற்பட்ட வெரைட்டில் தற்போது குர்த்திக்கள் விற்பனைக்கு வந்து கொண்டிருக்கின்றன.
சுடிதார் பாட்டம்: ரெகுலாராக அணியும் சுடிதார் பாட்டத்துடன் முழங்கால் அல்லது கணுக்கால் வரை உள்ள குர்தியை அணிந்தால் புது ட்ரெண்ட் லுக்கை கொடுக்கும். இந்த வகையில் நல்ல நீண்ட குர்திகளை அணிவது தான் சிறந்ததாக இருக்கும். குட்டையான குர்தியுடன் சுடிதார் பாட்டம் அல்லது லெக்கின்ஸ்களை அணிவது சிறப்பாக அமையாது என்பதால், அதனை தவிர்க்கலாம்.
ஜீன்ஸ்: குர்தாவுடன் ஜீன்ஸ் பேண்டை அணிவது ஓல்டு ஃபேஷனாக தோன்றலாம். அது நீங்கள் அணியும் குர்தாவுக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் ஆளுமையான லுக்கை கொடுக்கும் என்பதை மறக்காதீர்கள். குட்டையான பெண்கள் ஸ்லீவ்லெஸ், 3/4 ஹேண்ட் அல்லது ஃபுல் ஹேண்ட் குர்தாவை அணியும் போது உயரமான தோற்றத்தை தருகிறது. குட்டையான அல்லது முழங்கால் வரை உள்ள குர்தாவை ஸ்கின்னி அல்லது கணுக்கால் வரையிலான ஜீன்ஸ் உடன் இணைப்பது அழகான தோற்றத்தை கொடுக்கும்.
பட்டியாலா பேண்ட்: உங்களிடம் ஷார்ட் குர்தி இருக்கிறது என்றால், நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு அதனை பட்டியாலா பேண்ட் உடன் அணிந்து கொள்ளலாம். ஸ்டைல் ஸ்டேட்மெண்டாக விளங்கும் பட்டியாலா பேண்ட் உடன் டிசைனர் குர்தா மற்றும் வேலைப்பாடுகள் நிறைந்த துப்பாட்டாவை அணிந்து கொண்டால் போதும் நீங்கள் திருமணம், வரவேற்பு என எந்த நிகழ்ச்சிக்கும் செல்ல அசத்தலாக ரெடி என்று அர்த்தம். உடனே சிஃப்பான், பட்டு, காட்டன், ஜார்ஜெட் அல்லது குர்தாவுடன் பொருந்தக்கூடிய வேறு எந்தப் பொருட்களாலும் செய்யப்பட்ட பாட்டியாலா பேன்ட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
லாங் ஸ்கர்ட்: மேலே சொன்ன அனைத்து வகைகளை விடவும் ரொம்ப ஈஸியான மிஸ் மேட்சிக் டெக்னிக் இதுவே. நீண்ட டிசைனர் குர்தாவை, ப்ளோரல் டிசைன் லாங் ஸ்கர்ட்டுடன் இணைந்து அணியலாம். அதுவே திருமணம், வரவேற்பு, பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தால் இத்துடன் ஒரு கிராண்ட் டிசைன் கொண்ட துப்பட்டாவை மட்டும் சேர்த்து கொண்டால் போதும்.