

இன்றைய பெண்களின் ஃபேவரட் உடை என்றால் பலாஸோவும் அதில் இடம் பெறும். குறிப்பாக கல்லூரி பெண்கள் தொடங்கி வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவருக்கும் இது பெஸ்ட் உடையாகவும், சௌகரியமாகவும் உள்ளது. ஏனெனில் இந்த பலாஸோவை எந்த வகை டாப்ஸ் வகைகளுடனும் மிக்ஸ்மேட்ச் செய்யலாம். அதேசமயம் தோற்றமும் டிரெண்டியாக இருக்கும். எனவேதான் இதை பலரும் விரும்புகின்றனர். அந்த வகையில் எதெந்த டாப்ஸ் வகைகளுடன் மிக்ஸ்மேட்ச் செய்வது பக்கா பொருத்தமாக இருக்கும் என்று பார்க்கலாம்.


டாங்க் டாப் , கிராப் டாப் மற்றும் பலாஸோ : நீங்கள் சற்று டிரெண்டியானவர் எனில் ஃபிரீ ஸ்டைல் பலாஸோ தேர்வு செய்து அதற்கு பக்காவான எதிர் நிறத்தில் டாங்க் டாப் அல்லது கிராப் டாப் தேர்வு செய்யுங்கள். இது கல்லூரி மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்கள் இருவருமே முயற்சி செய்யலாம். ஃபிரீ ஹேர் விட்டு சிம்பிள் மேக்அப் செய்தால் பக்காவாக இருக்கும்.


டீ.ஷர்ட் மற்றும் பலாஸோ : உங்களுக்கு பிரிண்டுகள் அடங்கிய பலாஸோ பேன்ட் அணிவதுதான் பிடிக்கும் எனில் அதற்கு பொருத்தமான அடர் நிற டீ.ஷர்ட் அணியலாம். இது கல்லூரி பெண்களுக்கு பாப்அப் லுக் தரும். இதற்கு ஸ்னீக்கர்ஸ், லெதர் பின் பக்க பேக் அணிந்தால் சூப்பராக இருக்கும்.


நீளமான குர்தா மற்றும் பலாஸோ : பருத்தி அல்லது லினல், சில்க் என பிடித்த ஃபேப்ரிகில் நீளமான டாப் எடுத்து அதற்கு எதிர் நிறத்தில் அல்லது அதே நிறத்திலும் பலாஸோ மேட்ச் செய்யலாம். இந்த லுக் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு ஸ்டைலிஷாக இருக்கும். இதற்கு ஜூட் வகை காலணிகள் அணியலாம்.


ஷர்ட் மற்றும் பலாஸோ : பலாஸோ பேன்ட் ஷர்ட் வகைகளுக்கு நல்ல பொருத்தமாக இருக்கும். இந்த மேட்ச் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பாஸி லுக் தரும். புரஃபஷ்னலாகவும் இருக்கும்.


ஷார்ட் குர்தா : ஷார்ட் குர்தா வகைகளுக்கும் பலாஸோ பொருத்தமாக இருக்கும். இதுவும் டிரெடிஷ்னலாகவும் அதேசமயம் ஸ்டைலாகவும் இருக்கும். கல்லூரி பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள் அணியலாம்.