ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

கோடை வெப்பத்தைக் காட்டிலும் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால், வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

 • 17

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்தபிறகு மாஸ்க் அணிவது என்பது அனைவருக்கும் கடமையாக மாறிவிட்டது. தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டதால் முகத்தில் அணியும் மாஸ்க் பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. கொளுத்தும் வெப்பம் மற்றும் அதனால் ஏற்படும் வியர்வை காரணமாக ஒருவரால் நீண்ட நேரம் மாஸ்க் அணிய முடியாமல்கூட போகலாம். அப்படியான அசௌகரியத்தை குறைக்க நீங்கள் சில வழிமுறைகளை பின்பற்றலாம்.

  MORE
  GALLERIES

 • 27

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  பருத்தி துணி முகக்கவசம் : மாஸ்கின் தேவை அதிகரித்த காரணத்தால் பல்வேறு துணி வகைகளில் மாஸ்க்குகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன. தோல் அழற்சி உள்ளிட்ட பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், உங்களின் தோலுக்கு ஏற்ற மாஸ்க்குகளை வாங்கி அணியாவிட்டால் தொந்தரவு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 37

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  குறிப்பாக, பாலிஸ்டர் வகை மாஸ்க்குகளை அணிவது பலருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இது குறித்து மும்பையைச் சேர்ந்த மருத்துவர் ஜொயீதா பிஸ்வாஸ் பேசும்போது, பருத்தி வகை மாஸ்க்குகள் கோடை காலத்துக்கு ஏற்றதாக தெரிவிக்கிறார். சுவாசத்திற்கும், தோல் பிரச்சனைகளில் இருந்து பாதுகாப்பதற்கும் காட்டன் (பருத்தி) மாஸ்குகளை அணியலாம் என பரிந்துரைத்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 47

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்க்குகள் : கோடை காலமாக இருப்பதால் உடலில் அதிக வியர்வை வெளியாகும். அதனால், நீண்ட நேரம் ஒரே மாஸ்க் அணிவது ஏற்றதல்ல. பருத்தி துணியில் செய்யப்பட்ட மாஸ்க்குகளாக இருந்தாலும் சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக அந்த மாஸ்க்கை பயன்படுத்தும்போது உமிழ்நீர் சுரப்பிகள் மற்றும் வியர்வை மாஸ்க்குகளில் படிந்திருக்கும். இதுவும் தோல் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளது. எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட மாஸ்க்குகளை கைவசம் வத்திருப்பது நல்லது என நுரையீரல் நிபுணர் தன்வி கன்னா கூறியுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 57

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  மாஸ்க் கலர் : மாஸ்க் கலரை தேர்ந்தெடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என உடை நிபுணரான கீதா கங்வானி கூறியுள்ளார். கருப்பு மற்றும் கருநீல நிறமுடைய மாஸ்க்குகள் வெப்பத்தை தக்கவைத்துக்கொள்ளும் தன்மையுடவை என்பதால் அந்த நிறத்தில் உள்ள மாஸ்க்குகளை அணிவதை தவிர்க்க வேண்டும் என கூறும் அவர், வெள்ளை மற்றும் பாதியளவிலான வெள்ளை நிறமுடைய மாஸ்க்குகளை அணியலாம் என பரிந்துரைத்துள்ளார். மேலும், கிரீம் நிறத்திலான மாஸ்க்குகளையும் அணியலாம் என கீதா கங்கவானி தெரிவித்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 67

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  அசௌகரியமாக உள்ளது என்பதற்காக மாஸ்க் அணிவதை தவிர்ப்பது மேலும் உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த கூடும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். கோடை வெப்பத்தைக் காட்டிலும் கொரோனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்பதால், வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் மாஸ்க் அணிவதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 77

  கோடை காலத்தில் மாஸ்க் அணிவது அசௌகரியமாக உள்ளதா? இப்படி செய்து பாருங்கள்..!

  இந்த டிப்ஸ்கள் மாஸ்கினால் நீங்கள் அசௌகரியத்தை உணர்ந்தால், அதில் இருந்து எப்படி தற்காத்துக்கொள்ளலாம் என்பதை கூறுகிறதே தவிர மாஸ்க் அணியக் கூடாது என்பதை கூறவில்லை. தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு முன்பைவிட பன்மடங்கு அதிகரித்து வருகிறது. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாமல் அலட்சியம் காட்டினால் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிப்பது கடினம்.

  MORE
  GALLERIES