இந்த கோடைகால சுற்றுலா பயணத்திற்கு நீங்கள் திட்டமிடும்போது, உங்களை அழகாக படம் பிடித்துக் கொள்ள தவறாதீர்கள். அதே சமயம், என்ன மாதிரியான உடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்தால் அழகாக இருக்கும் என்று குழப்பமாக இருக்கிறதா? அப்படியானால் நடிகை பூஜா ஹெக்டேவை பின்பற்ற முயற்சி செய்யுங்கள். சுற்றுலாவுக்கான பிரத்யேக ஆடைகளுடன் பல போஸ்களை கொடுத்துள்ளார் அவர்.
மேட்ச் அண்டு மேட்ச் : உங்கள் தோற்றத்தை நலினமாக காண்பிக்கும் உடையணிந்து அழகாக போஸ் கொடுப்பதைக் காட்டிலும் சிறந்த ஆப்சன் வேறெதுவும் இருக்க முடியுமா? இந்த ஃபோட்டோவில் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற கோடுகள் பிரிண்ட் செய்யப்பட்ட ஆடைகளை அணிந்திருக்கிறார் பூஜா ஹெக்டே. மேலாடை மற்றும் ஸ்கர்ட் ஆகிய அனைத்தும் ஒரே டிசைனில், ஒரே கலரில் பார்க்கவே அழகாக இருக்கின்றன.