பெண்களில் பலர் ஹை ஹீல்ஸ் அணிவதையே அதிகம் விரும்புகின்றனர். தட்டையான, உயரம் குறைவான காலணிகளை பலர் விரும்புவதில்லை. ஜீன்ஸ், சுடிதார், ஸ்கர்ட் போன்ற மாடர்ன் உடைகளை அணியும்போது, சாதாரண வகை காலணிகளை அணிவது பொருத்தமானதாக இல்லை எனக் கருதுகின்றனர். அதுவே, ஹை ஹீல்ஸ் அணியும் போது, இந்த உடைகளில் தங்களின் தோற்றம் சிறப்பானதாக இருக்கிறது என நினைக்கின்றனர்.
என்னதான், நம்முடைய பெர்சனாலிட்டி லுக் முக்கியம் என்றாலும், நமது உடல்நலன் குறித்தும் நாம் கவனம் கொள்ள வேண்டும். நீடித்த பாதவலி என்பது நமக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தலாம். ஆகவே, நாம் அதை தவிர்ப்பதற்கான டிப்ஸ்களை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதற்காக வெறும் கால்களோடு நடந்து செல்ல வேண்டும் என்று அர்த்தம் இல்லை. ஹீல்ஸ் அணியும் அதே சமயத்தில் பாதங்களை தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை கடைப்பிடிக்கலாம்.
வாலியில் கால்களை ஊற வைக்கலாம் : அரை வாலி அளவுக்கு வெந்நீர் நிரப்பி, அதில் உங்கள் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருக்கலாம். பித்தவெடிப்பு இருந்தால் தொடக்கத்தில் கொஞ்சம் வலி ஏற்படும். ஆனால், சிறிது சூடு ஏறியவுடன் தசைகளுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். கொஞ்சம் நல்ல அனுபவம் கிடைக்க இந்த வெந்நீரில் கொஞ்சம் வலி நிவாரண எண்ணெய்களை சேர்த்து கொள்ளலாம்.
குதிகால் வெடிப்பு மற்றும் புண்களை குணப்படுத்தவும் : உங்கள் குதிகால் வெடிப்பு இருக்கிறது என்றால், அதை சரி செய்வதற்கான க்ரீம் தடவுவதோடு விட்டு விடாதீர்கள். அதை மேலும் பெரிதாக்க விடாமல் தடுக்கும் உறை ஒன்றை அணிந்து கொள்ளுங்கள். அதே சமயம், உங்கள் கால்களில் புண் ஏற்பட்டால், தயங்காமல் ஹீல்ஸ்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, சாதாரண காலனிகளை அணியுங்கள். அடுத்த முறை ஹீல்ஸ் அணியும் போது புண்களில் இருந்து தற்காத்துக் கொள்ள பிளிஸ்டர் பேட்களை அணிந்து கொள்ளுங்கள்.