ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடல் தோற்றத்தை கொண்டுள்ளனர். அப்படி நம்மில் சிலர் உள்ளதாக இருப்போம். ஒவ்வொரு நாளும், கொஞ்சம் நாம் உயரமாக இருந்திருக்கலாம் என நினைத்திருப்போம். இன்னும் சிலர் குண்டாகவும் உயரம் கம்மியாகவும் இருப்பார்கள். ஆடை அலங்காரம் மூலம் உங்கள் தோற்றத்தை முழுமையாக மாற்றிவிடலாம் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. குட்டையாக குண்டாக இருப்பவர்கள், ஒல்லியாகவும் உயரமாகவும் தெரிய எப்படி டிரஸ் பண்ணனும் என நாங்கள் கூறுகிறோம்.
செங்குத்தாக கோடிட்ட ஆடை : செங்குத்தாக கோடிட்ட ஆடைகள் மற்றவர்களின் பார்வையில் உங்களை ஒல்லியாகும் உயரமாகவும் காட்டும். இந்த கோடுகள் கிடைமட்டமாக இல்லாமல், மேலிருந்து கீழாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், இது மற்றவர்களுக்கு ஒரு மாயைத் தோற்றத்தை காண்பிக்கும். அதாவது, உங்களை உயரமாகவும், ஒல்லியாகவும் காட்டும்.
அடர்த்தியான நிற ஆடைகள் : உங்கள் ஆடைகள் அடர்த்தியான ஒரே வண்ணம் உடைய நிறத்தில் இருப்பதை உறுதி செய்யவும். இதனால், நீங்கள் மற்றவர்களின் கண்களுக்கு ஒல்லியாகவும், உயரமாகவும் தெரிவீர்கள். கழுத்து மற்றும் கைகளில் காண்ட்ராஸ்ட் கலரில் பாடர் இருப்பதும் நல்லது. இது மற்றவர்களின் பார்வையுடன் விளையாடுவதற்கான மற்றொரு வழி. ஏனெனில், இந்த ஆடைகள் மற்றவர்களின் கவனத்தை திசைதிருப்பும்.
பேண்ட்டை உயர்த்தி போடுங்கள் : பேண்ட்டை எப்போதும் உயர்த்தி அணியவும். இப்படி அணிவதால், உங்கள் உடற்பகுதியை மெலிதாகவும், கால்களை நீளமாகவும் காட்டும். அதுமட்டும் அல்ல, உங்கள் தொப்பை மற்றும் தொடைப்பகுதி முழுமையாக மறையும். அதே போல பெல்ட் அணிவதும் நல்ல தந்திரம். எப்போதும் மெல்லிய பெல்ட்டைத் தேர்வுசெய்யவும். இல்லையெனில், தோற்றம் முற்றிலும் தவறாகிவிடும். உங்களை ஒல்லியாக காட்டுவதற்குப் பதில் குண்டாக காட்டும்.