அப்படி தீபிகா படுகோன் தன்னுடைய ஆடைகளுக்காக தேர்வு செய்யும் காலணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். அவரிடம் இல்லாத காலணி வகைகள் , நிறங்களே இல்லை எனலாம். குறிப்பாக பூட்ஸ், ஸ்னீக்கர்ஸ் , ஸ்டெலட்டோஸ்கள் மீது தீபிகாவிற்கு இருக்கும் ஈர்ப்பை அவரின் நேர்த்தியான நடையே காட்டிக் கொடுத்துவிடும். அதேபோல் ஏர்போட் ஸ்டைல்களில் தீபிகாவிற்கு நிகரான ஸ்டைலை யாரும் கொண்டிருக்க முடியாது. ஜீன்ஸ் பேண்ட் முதல் சுடிதார் வரை கல்லூரி பெண்கள், அலுவலகப் பெண்கள் என அனைவருக்குமான ஸ்டைலிங் முன்னுதாரனமாக இருக்கிறார்.