ஆணோ, பெண்ணோ எந்த உடை அணிந்தாலும் சற்று உயரமாக தெரிய வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அதிலும் வெஸ்டர்ன் உடைகள் அணிந்தால் இந்த எண்ணம் பல மடங்கு அதிகரித்து விடுகிறது. இன்று பெண்கள் அணியும் சல்வார் சூட்டில் எப்படி உயரமாக காட்சி தருவது என்று சில குறிப்புகளை பார்ப்போம். பொதுவாக பெண்கள் உயரமாக தெரிய இருக்கும் ஒரே வழி ஹீல்ஸ் அணிவது தான்! ஆனால் இனிமேல் அப்படி கஷ்டப்படத் தேவையில்லை. ஆடைகளை தேர்வு செய்வதில் சில விஷயங்களைப் பின்பற்றினால் உயரமாகத் தெரியலாம்.
அடர் நிற ஆடைகளை தேர்ந்தெடுக்கவும் : பெண்கள் அடர்த்தியான நிறங்களில் உடை அணியாமல் போனால் சற்று குள்ளமாக தெரிவார்களாம். (வெளிர் நிறங்களைஅணியும்போது). எனவே உயரமாக தெரிய நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய நிறங்கள் கருப்பு, கரு நீலம் அல்லது மெருன் போன்ற அடர் நிறங்கள் ஆகும். இந்த நிறங்களை அணியும் போது அட்டகாசமான தோற்றம் கிடைப்பதனால் சற்று உயரமாகவே தெரிவீர்கள்.
முழுக்கை சட்டைகளை மற்றும் சூட்களை அணியுங்கள் : இன்றைய காலகட்டத்தில் அரைக்கை சட்டை, முக்கால் சட்டை, குர்த்தி போன்றவை தான் இப்போது ரொம்ப ஃபேமஸ். இருந்தாலும் அப்படி போன்ற அரை கை சட்டைகள், பாண்டுகள் அணிவதால் சற்று உயரம் கம்மியாக தோற்றம் அளிப்பீர்கள். ஃபுல் ஸ்லீவ் சட்டைகள் அணியும் போது நாம் மிக உயரமாக காட்சியளிக்கிறோம் என்று கூறுகிறது ஆய்வு.
ஃபிட்டான ஆடைகளை அணியுங்கள் : ஆள் பாதி ஆடை பாதி என்று அந்த காலம் முதலே கூறுவார்கள். நாம் ஆடைகளை தொல-தொலா வென்று அல்லது மிகவும் இறுக்கமாக அணிந்து நின்றால் நாம் கொடுக்கும் தோற்றமே பாழாகிவிடும். எனவே நமது உயரத்துக்கு ஏற்றார் போல மிக கச்சிதமான ஃபிட்டிங்கில் உள்ள ஆடைகளை அணிந்தால் மட்டுமே நாம் எப்படி விரும்புகிறோமோ அப்படி தோற்றம் அளிக்க முடியும்.எனவே தொல -தொல சட்டைகளோ அல்லது அதிக கனமான சட்டைகளையோ தவிர்த்து விட்டு நமக்கு எது பிட்டாக இருக்கிறதோ அதை நான் அணிய வேண்டும். மேலும் தொலதோலாய் சட்டைகளை அணிவது மூலம் நாம் மிகவும் குட்டையாக தான் காட்சியளிப்போம்.
சூட்டுகளின் பிட்டிங்கும் மிக அவசியம் : சட்டைகளின் உயரம் போலவே கால் சட்டைகளின் உயரமும் மிக மிக அவசியம் கால் சட்டைகளை தொல -தொல என்று இருந்தால் முட்டியைத் தாண்டி ஒரு விதமாக… நாம் மிகவும் குட்டையாக இருப்பது போன்றது ஒரு தோற்றத்தை கொடுத்து விடும். சட்டைகள் ந்த அளவுக்கு பிட்டாக இருக்க வேண்டுமோ, அதே அளவுக்கு கால் சட்டைகளும் அதிக பிட்டாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் என்னதான் அழகாக சட்டை அணிந்து இருந்தாலும் கால் சட்டை நம்மை கெடுத்து விடும்.சில கால் சட்டைகள் நமது கால்களின் உயரத்தை விட மிக அதிகமாக இருக்கும்! அந்த கால் சட்டைகளை நாம் சரியாக பிடித்ததோ அல்லது மடித்து தைக்காமல் விட்டு விட்டால் நம்மை மிக மிக குள்ள ஆசாமியாயாக காட்டிவிடும். ஃபிட்னஸ் உடலில் மட்டுமல்ல ஆடைகளிலும் மிக மிக அவசியம்