முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

கைகளும், விரல்களும் விரைவில் குளிர்ச்சியடைக்கூடியவை என்பதால், அதைத் தடுப்பதற்கு நீங்கள் கையுறைகள் அல்லது மிட்டன்கள் உபயோகிக்கலாம்.

  • 15

    குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    குளிர்காலம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கதகதப்பான ஆடைகளை அணிய வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதற்கேற்றால் போல் இந்தாண்டு வழக்கத்தை விட இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் குளிர் வாட்டி வதைத்தது. இந்திய ஆய்வு மையம் கூட, கடந்த ஆண்டை விட 2023 ஜனவரியில் அதாவது இந்த மாதம் குளிர் அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தெரிவித்தது. இந்த காலநிலைக்கு ஏற்ப வெப்பநிலை குறைவாக இருப்பதால், அன்றாட செயல்களைக் கூட நம்மால் செய்ய முடியாத நிலை உள்ளது. போர்வைக்குள்ளேயே படுத்துக்கொண்டு சூடான தேநீரை யாராவது தந்தால் நன்றாக இருக்குமோ? என்ற எண்ணம் நிச்சயம் அனைவருக்கும் தோன்றும். இந்நிலையை மாற்றி நீங்கள் குளிர்காலத்திற்கும் வெளியில் வர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படினா.. முதல்ல குளிர்காலத்தில் எந்த மாதிரியான ஆடைகளை அணிய வேண்டும் என இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 25

    குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    முதலில், உங்கள் சருமம் எவ்வளவு குளிர்ச்சியாக இருந்தாலும் அதன் மேல் மெல்லிய, நீண்ட கை கொண்ட ஆடைகளை அணியவும். ஏனென்றால் மெல்லிய ஆடை நீங்கள் அணியும் போது, உடலில் இருந்து ஈரப்பதத்தை மிகவும் திறம்பட நீக்குவதோடு விரைவாக காய்ந்துவிடுவதற்கு உதவியாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 35

    குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    அடுத்ததாக நீங்கள் வெப்பத்தை உடம்பில் தக்க வைத்துக் கொள்ளும் அளவிற்கு கம்பளி, பாலியஸ்டர் இரண்டின் கலவையாக உள்ள ஆடைகளை அணிய வேண்டும். க்ராப் டாப்ஸ், ஸ்வெட்டர்கள் மற்றும் திறந்த அல்லது முடிச்சுப் போடப்பட்ட பட்டன்-டவுன் ஷர்ட்களை நீங்கள் அணியலாம். முன்னதாக உங்களது உடல் அமைப்பிற்கு ஏற்றவாறு அமைப்பு, நிறம் மற்றும் வடிவங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 45

    குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    பின்னர் குளிரை வெல்ல நமக்கு ஒரு பாதுகாப்பு வெளிப்புற அடுக்கு அவசியமான ஒன்று. வெளிப்புற அடுக்குக்கு எந்த கோட், ஜாக்கெட், பிளேஸர், அகழி, போன்சோ, கேப், சால்வை அணியலாம். கடைசியாக, கடுமையான குளிர்காலத்தை வெல்ல நீங்கள் ஒரு தொப்பியை சேர்க்கலாம்.

    MORE
    GALLERIES

  • 55

    குளிர்கால ஆடைகளை எப்படி அணிய வேண்டும் தெரியுமா..? உங்களுக்கான டிப்ஸ்..!

    இதுப்போன்று குளிர்காலத்தில் 3 அடுக்குகளாக நீங்கள் ஆடை அணிந்துக்கொள்ளும் போது உங்களது உடல் நிச்சயம் கதகதப்பாகவே இருக்கும். இருந்தப்போதும் கைகளும், விரல்களும் விரைவில் குளிர்ச்சியடைக்கூடியவை என்பதால், அதைத் தடுப்பதற்கு நீங்கள் கையுறைகள் அல்லது மிட்டன்கள் உபயோகிக்கலாம். இது உங்களது கைகளை கதகதப்பாக வைக்கவும். விரல்கள் ஒன்றுடன் ஒன்று படுவதால் வெப்பமான சூழலை நாம் உணர்வோம் என்பதால், கையுறைகளை விட மிட்டன்களை நீங்கள் உபயோகிக்கலாம். மேலும் காதுகளை மூடுவதற்கு ஹெட் பேன்ட், கால்களில் சாக்ஸ் போன்றவற்றை நீங்கள் அணியும் போது குளிர் நிச்சயம் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

    MORE
    GALLERIES