முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

குண்டாக இருந்தாலும் சரி, உங்கள் தோற்றத்துக்கு ஏற்றவாறு சரியான ஆடை அலங்காரங்களை செய்வது மிகவும் அவசியம் ஆகும். பின்வரும் ஸ்டைலிங் டிப்ஸ் உங்கள் மெல்லிய தோற்றத்திற்கு மெருகேற்றி உங்களை அட்டகாசமாக காட்ட உதவும்.

 • 17

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  நீங்க ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா? உங்க ஸ்லிம் ஆன உடலுக்கு கச்சிதமான ஆடைகளை எப்படி தேர்வு செய்றதுன்னு குழப்பமா? அப்போ, இந்த ஸ்டைலிங் டிப்ஸ் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 27

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  ஒல்லியா கனக்கச்சிதமா இருந்தாலே மத்தவங்க நம்மல பார்த்து பொறாமைபடுவதுண்டு. ஆமாங்க, எப்படி தான் இவ்வளவு சாப்பிட்டும் உனக்கு மட்டும் உடம்பு ஏறாம அப்படியே ஒல்லியா மெயின்டெய்ன் பண்றன்னு ஆச்சரியப்படுவாங்க. இது கண்டிப்பாக கடவுள் அளித்த ஒரு வரம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், ஒரு சிலர் எவ்வளவு தான் உணவு கட்டுப்பாடுடன் இருந்தாலும், குண்டாக இருப்பார்கள்.

  MORE
  GALLERIES

 • 37

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  அதே சமயம், ரொம்ப ஒல்லியா இருக்கவங்களும், நம்ம கொஞ்சம் பூசுனாப்புல இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுவதும் உண்டு. இக்கரைக்கு அக்கரை பச்சை என்று தான் மனதை தேற்றி கொள்ள வேண்டும். சரி வாங்க, நாம இப்போ விஷயத்திற்கு வருவோம். ஒல்லியாக இருந்தாலும் சரி, குண்டாக இருந்தாலும் சரி, உங்கள் தோற்றத்துக்கு ஏற்றவாறு சரியான ஆடை அலங்காரங்களை செய்வது மிகவும் அவசியம் ஆகும். பின்வரும் ஸ்டைலிங் டிப்ஸ் உங்கள் மெல்லிய தோற்றத்திற்கு மெருகேற்றி உங்களை அட்டகாசமாக காட்ட உதவும்.

  MORE
  GALLERIES

 • 47

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  ஸ்கின்னி ஜீன்ஸிற்கு குட் பை சொல்லுங்கள் : ஸ்கின்னி ஜீன்ஸைத் தவிர்த்து தொள தொளவென்று இருக்கும் அகன்ற கால் உடைய ஜீன்ஸ் அணிந்து கொண்டால் உங்கள் ஒல்லியான தேகத்திற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இது உங்களை மிகவும் ஒல்லியாக காட்டாமல் இருப்பதோடு, ஸ்டைலாக தோற்றமளிக்கவும் உதவும்.

  MORE
  GALLERIES

 • 57

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  பஃப்ட் ஸ்லீவ்ஸுக்கு மாறுங்கள் : உங்கள் தோற்றத்திற்கு மெருகேற்றக் கூடிய ஒரு அசத்தலான வழி பஃப் வைத்த ஸ்லீவ்ஸ் உடைய பிளவுஸ் அணிவதாகும். இது உங்கள் நேரான தோற்றத்திற்கு வளைவு சுளிவுகளை அழகாக எடுத்து காட்டும். மொத்தத்தில் உங்கள் ஒல்லியான தேகத்திற்கு ஏற்ற ஆடைகளில் இதுவும் ஒன்று.

  MORE
  GALLERIES

 • 67

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  வெர்ட்டிக்கல் ஸ்ட்ரைப்ஸ் உடைய ஆடைகளை தவிர்த்திடுங்கள் : வெர்ட்டிக்கல் ஸ்ட்ரைப்ஸ் கொண்ட ஆடைகளைத் தவிர்த்து நீங்கள் ஹாரிஸான்ட்டல் ஸ்ட்ரைப்ஸ் உடைய ஆடைகளைத் தேர்வு செய்யலாம். இது உங்களை ஸ்லிம்மாகவும், உயரமாகவும் காட்டும். கீழ் நோக்கி அமைந்திருக்கும் நேர்கோடுகள் பார்வையை மேலிருந்து கீழாகச் சென்று உங்களை உயரமாகவும் ஸ்லிம் ஆகவும் தோற்றமளிக்கச் செய்வது போலவே, இடது பக்கத்தில் இருந்து வலது பக்கமாகச் செல்லும் கோடுகள் உங்களை சற்று அகலமாக இருப்பது போல தோற்றமளிக்க செய்து விடும்.

  MORE
  GALLERIES

 • 77

  நீங்கள் ஒல்லியாக இருப்பதால் எந்த ஆடை அணிந்தாலும் எடுப்பாக தெரிவதில்லையா..? இந்த ஸ்டைலிங் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..!

  பாக்சி ஃபிட்ஸ் : ஒல்லியான தோற்றம் உடைய பெண்களுக்கு அகலமான மற்றும் பாக்ஸி ஃபிட் உடைய ஆடைகள் சரியான தேர்வாக அமையும். அவை உங்கள் உடலுக்கு ஏற்றவாறு இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உடலை ஒட்டி இருக்கக் கூடிய பாடிகேன் டாப்ஸ் அல்லது பிற ஆடைகளை அணிவதற்குப் பதிலாக, சற்று லூசான ஆடைகளை தேர்வு செய்து அணிவதே உங்கள் தோற்றத்துக்கு ஏற்ற மிகச் சிறந்த ஆப்ஷனாகும்.

  MORE
  GALLERIES