மக்கள் மத்தியில் பிரபல செய்தி வாசிப்பாளராக வலம்வந்த அனிதா சம்பத் விஜய் டியின் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் 4-யில் கலந்துகொண்டதன் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானார். என்னதான் வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாப்பாத்திரங்களில் நடித்து வந்தாலும், 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் செய்தி வாசிப்பாளராக இப்ப வரைக்கும் இருந்து வருகிறார். ஏனென்றால், இவரின் தமிழ் உச்சரிப்பு அப்படி.
அனிதாசம்பத் Vlogs என்ற டியூப் சேனலை நடத்தி வருகிறார். இதை 1.15 மில்லியன் பயனர்கள் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். அனிதா தனது வாழ்க்கையில் நடக்கு அனைத்து சம்பவங்களையும் இதில் வீடியோவாக பதிவிட்டு வருகிறார். அதுமட்டும் அல்ல, அழகு குறிப்பு, புடவை கட்டுவது, ஆடைகளுக்கான டிப்ஸ் என பல விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அப்படி அவர் பதிவிட்டுள்ள வீடியோவில், குண்டா இருப்பவர்கள் ஒல்லியாக தெரிய எப்படி ட்ரெஸ் செய்யலாம் என டிப்ஸ் கொடுத்துள்ளார்.
டார்க் கலர் உடை : அடர்த்தியான நிற ஆடைகளை அணியும் போது, இயல்பாக குண்டாக இருப்பவர்கள் ஒல்லியாக தெரிவார்களாம். பிளைன் அடர் நிற ஆடைகளை தேர்வு செய்யாமல், கழுத்து மற்றும் கைகளில் பேட்டன் இருப்பதை போல ஆடைகளை தேர்வு செய்யவும். இது, உங்கள் கைகளில் இருக்கும் சதைகளை மறைக்கும். இந்த டிரஸ்க்கு குதிரைவால் மற்றும் வளைய தோடு அணியலாம்.