பெண்களுக்கான ஆடைகள் தேர்வில் உள்ளாடைகளுக்கு தனி கவனமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படும். காலம் காலமாக, பிரேசியர்கள் பல விதமான மாறுதல்களை கண்டுள்ளன. ஒரு அவசியமான உள்ளாடை என்பதைக் கடந்து, ஸ்டைல், ஃபேஷன், உடலின் அமைப்பை நேர்த்தியாகக் காட்டும் ஆடை வகை என்று மார்பகங்களில் அழகை, வடிவத்தை மேம்படுத்தி, சப்போர்ட் தரும். கடந்த நூற்றாண்டில் அணியப்பட்ட இறுக்கமான உள்ளடையான கார்செட் வழக்கொழிந்து போய், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஸ்போர்ட்ஸ் பிரா (அதாவது சாதாரண பிரேசியர்) பிரபலமானது.
அதன் பிறகு, கால மாறுதலுக்கு ஏற்ப, ஃபேஷன் உலகில் பிராவின் டிசைனும் ஸ்டைலும் பல விதங்களில் மேம்பட்டன. ஸ்ட்ராப்லெஸ் பிரா, பேக்லெஸ் பிரா, வயர்லெஸ் பிரா, அண்டர் வயர் பிரா என்ற வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு ஃபேப்ரிக்கில் கிடைக்கின்றன. இந்த ஆண்டு எந்த வகையான பிராக்கள் டிரெண்டில் உள்ளன என்று பார்க்கலாம்.
ஹை -டெக் அண்டர்கார்மெண்ட்ஸ் – தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்கள், கார்மென்ட் துறையிலும் புதிய மாறுதல்களைக் கொண்டுவந்துள்ளது. தொழில்நுட்ப வசதியோடு, பல விதமான ஃபேப்ரிக்கில் பிரேசியர்களை உற்பத்தி செய்யலாம். உடல் மற்றும் சூழலின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப தானே ரெகுலேட் ஆகும் ஃபேப்ரிக்கில் உள்ளாடைகள் தயாரிக்கப்படுகின்றன. இது நாள் முழுவதும் உலர்வாகவும், குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும் படி உருவாக்கப்படுகிறது.
கன்வர்ட் செய்யக்கூடிய ஸ்ட்ராப்ஸ் : கடந்த சில மாதங்களாக மாற்றி அமைக்கக் கூடிய ஸ்ட்ராப்கள் கொண்ட பிரேசியர்கள் பெண்களால் அதிகம் விரும்பப்பட்டன. வழக்கமாக தோள்களில் அணிவது மட்டுமல்லாமல், கிரிஸ் கிராசாக, ஹால்டர் நெக் வடிவில் என்று மாற்றிக் கொள்ளக் கூடிய வகையில் ஸ்ட்ராப்களுடன் வரும் பிராக்கள் இந்த ஆண்டும் டிரெண்டில் உள்ளன.
வண்ண வண்ண பிரின்ட் : பொதுவாக, பிரா என்றாலே கருப்பு, வெள்ளை, என்பதை கடந்து, பல வண்ணங்களில் பிராக்களை அணியும் பழக்கம் வந்தது. அதைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் முக்கிய டிரெண்டாக, அழகான வண்ண வண்ண பிரின்ட்களில், பளிச்சென்ற நிறங்களில், பூக்கள் முதல் கட்டங்கள் உள்ளிட்ட டிசைன்கள் வரை, பெண்களின் தேர்வாக இருக்கிறது.