கேப்ரியெல்லா சீரியலில் நடிப்பதை பார்ப்பதற்கு ஒரு கூட்டம் இருந்தால் அவருடைய புடவை கலெக்ஷன்களை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் இருக்கும். காரணம் அவருடைய புடவை ஒவ்வொன்றும் அவ்வளவு தனித்துவமானதாக இருக்கும். பெண்களுக்கும் இதுபோன்ற புடவையைதான் வாங்க வேண்டும் என நினைக்கும் எண்ணம் வரும். அப்படி நீங்கள் அவருடைய புடவைகளுக்கு ரசிகை எனில் அவரே பகிர்ந்துகொண்ட இந்த வீடியோ உங்களுக்குதான்.
Gabriella Charlton என்கிற அவருடைய யூடியூப் சேனனில் 278K சப்ஸ்கிரைபர்களைக் கொண்டுள்ளார். அதில் அவ்வபோது தன்னுடைய ஃபேஷன், பியூட்டி மற்றும் அன்றாட வாழ்க்கை முறை, டயட் போன்ற விஷயங்களை பகிர்ந்துகொள்வார். அந்த வகையில் சமீபத்தில் அவர் சீரியலுக்கான புடவைகளை இந்த கடையில்தான் வாங்குவேன் என அவரின் ஷாப்பிங் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அவர் சீரியலுக்காக மட்டுமல்லாமல் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்வதாக இருந்தாலும் கீழ்பாக்கம் யூனிக் பொட்டிக்கில் தான் ஆடைகளை வாங்குவாராம். ”இங்கு புடவை , சல்வார் கலக்ஷென்கள் சிறப்பாக இருக்கும். என்னுடைய அனைத்து புடவைகளும் சிறப்பாக இருக்கிறது என நினைத்தால் அதற்கு இந்த கடைதான் காரணம்” என்று கூறியுள்ளார்.