நாம் என்ன தான் படித்திருந்தாலும், நம்முடைய நடை, உடை தான் மற்றவர்களிடமிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவதோடு, சமூகத்தில் நமக்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு உதவியாக உள்ளது. இதோடு மட்டுமின்றி உங்களின் ஆளுமைத் தன்மையும் ஆடை அலங்காரத்தில் தான் முழுமையாக வெளிப்படும். ஆம் சரியான ஆடைகள் அணியாமல் நாம் எந்தவொரு முக்கியமான வேலைகளுக்குச் சென்றாலும் நம் மனதில் ஏதோ ஒரு அச்சம் நம்மை ஆட்கொள்வதோடு தாழ்வு மனப்பான்மையும் ஏற்படுத்தும். எனவே தான் ஆடைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்கின்றனர். இதோ வெளிப்புறத் தோற்றத்திலும் நீங்கள் அழகாக இருப்பதற்கான சில டிப்ஸ்கள் இங்கே..
நிறத்தைக் கவனித்தல் : வண்ணங்களின் சரியான கலவையானது உங்கள் அலங்காரத்தை உண்மையில் உயர்த்திக்காட்டும். ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான கலர் அவர்களை அழகாகக் காட்டும் என்பதால் அதற்கேற்றால் போல் நீங்கள் உங்களதுஆடைகளைத் தேர்வு செய்ய மறந்துவிடாதீர்கள். இதோடு அதற்கேற்ப அணிகலன்களையும் நீங்கள் அணிய வேண்டும். உதாரணமாக நீங்கள் நீல நிற ஆடை அணிந்து வெளியில் சென்றால், அல்லது மஞ்சள் நிறப் பை உங்களை ஸ்டைலாக காட்டும்.
உங்களது உடலுக்கு ஏற்ற ஆடைகள் அணிதல் : நம்மில் அனைவருக்கும் அனைத்து ஆடைகளும் சூட் ஆகாது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உடல் அமைப்புகளுக்கு ஏற்ப ஆடைகள் அணியும் போது தான் அவர்கள் அழகாகத் தெரிவார்கள். உடல் பருமனாக இருக்கும் பெண்கள் மற்றும் ஒல்லியாக இருக்கும் பெண்கள் அவர்களின் உடல் அமைப்பிற்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும்.. உதாரணமாக – உங்களின் உடல் அமைப்பு ஒல்லியாக இருந்தால், பரந்த கொக்கி பெல்ட்டைப் பயன்படுத்தவும். மேலும் வட்ட வடிவிலான முகம் கொண்ட ஒருவர், தங்கள் முகத்தை நீளமாகக் காட்ட நீண்ட காதணிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.