முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

ஒரு பார்மலான ஒரு டேட் நைட்க்கு செல்ல போகிறீர்கள் என்றால் ஒரு ஃபார்மல் சூட் அல்லது பிளேசர், பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை தேர்வு செய்யலாம். இது உங்களை ஸ்டைலிஷான தோற்றமுள்ளவராக காண்பிக்கும்.

 • 16

  உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

  காதலர் தினம் என்பது எல்லோருக்குமே கொஞ்சம் ஸ்பெஷல்தான்! காதலித்து கொண்டிருப்பவர்களும் சரி திருமணம் ஆனவர்களும் சரி இந்த நாளை கொண்டாடுகிறார்கள். அது மட்டுமல்லாமல் இதேபோன்ற ஸ்பெஷல் தினங்களில் அழகாக ஆடை அணிவது அவசியம் தானே! நீங்கள் டின்னருக்கு சென்றாலும் சரி, அல்லது வீட்டிலேயே காதலர் தினத்தை ஸ்பெஷலாக கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தாலும் சரி, நீங்கள் அணியக்கூடிய ஆடைகளின் தேர்வு புதிதாகவும் ஸ்டைலாகவும் இருந்தால் அது இந்த தினத்தை மேலும் மேலும் அழகாக்கும்.காதலர் தினத்திற்கு எந்த ஆடை அணிவது என்று குழப்பம் இருந்தால் பின்வருவனவற்றில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம்.

  MORE
  GALLERIES

 • 26

  உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

  கருப்பு நிற ஷர்ட் கவுன்  : கருப்பு நிறம் என்பது அனைவருக்குமே பொருந்தும். ஆங்கிலத்தில் இந்த கருப்பு நிற கவுனை லிட்டில் பிளாக் டிரஸ் என்று கூறுவார்கள். இது ஒரு கிளாசிக்கான பேஷன் ஆடையாக கருதப்படுகிறது. இது எல்லா ஸ்பெஷல் தருணத்திற்கும் பொருந்தும். குறிப்பாக டின்னர் டேட் சென்றால், கருப்பு நிறத்தில் ஷர்ட் கவுனை அணிந்து கொண்டு செல்லலாம். அதுமட்டும் இல்லாமல் இது ஆடை பார்ப்பதற்கு எளிமையாக, அதே நேரத்தில் அட்டகாசமாக தோற்றமளிக்கும், எனவே, இதற்கு நீங்கள் பெரிய அளவு காதணிகள், செயின் என்று அணியலாம். கருப்பு நிற ஆடை, பெரிய பெரிய நகைகள் மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக் உங்கள் தோற்றத்தை தனித்துவமாக காட்டும்.

  MORE
  GALLERIES

 • 36

  உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

  சிவப்பு நிற கவர்ச்சியான ஆடை  : சிவப்பு என்பது காதலின் நிறம். எனவே காதலர் தினத்தன்று சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது மிகவும் பொருத்தமாக இருக்கும். சிவப்பு நிறத்தை பொறுத்தவரை நீங்கள் எந்த ஆடை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம். அழகான சிவப்பு நிற சேலை முதல் ஒரு பக்கம் ஷோல்டர் இருக்கும் மாடர்ன் ட்ரெஸ் வரை, உங்கள் விருப்பப்படி நீங்கள் எந்த ஆடை வேண்டுமானாலும் சிவப்பு நிறத்தில் தேர்வு செய்யலாம். சிவப்பு நிறத்துக்கு என்று தனித்துவமான கவர்ச்சியான தோற்றம் அளிக்கும் ஒரு தன்மை இருக்கிறது. எனவே நீங்கள் தலை முதல் கால் வரை உங்கள் சிவப்பு நிற ஆடைக்கு ஏற்றவாறு அலங்கரிக் கொண்டு காதலர் தினத்தை எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக மாற்றலாம்.

  MORE
  GALLERIES

 • 46

  உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

  பூக்கள் டிசைன் கொண்ட ஆடை  : கொஞ்சம் ஜாலியாக, ஃபெமினைன் தோற்றத்துடன் உங்கள் பார்ட்னரை இம்ப்ரஸ் செய்வதற்கு பூக்கள் டிசைன் கொண்ட ஆடைகளை தேர்வு செய்யலாம். பளிச்சென்ற நிறத்தில் ஆடைகளை தேர்வு செய்வது மிகவும் முக்கியம். பளிச்சென்று அணியும்போது அனைவரின் கவனமும் உங்கள் மீது திரும்பும், அவ்வாறு நீங்கள் விரும்பவில்லை என்றால் வெளிர் நிறத்தில் வண்ணப் பூக்கள் டிசைன் கொண்ட ஆடைகளை அணியலாம்.

  MORE
  GALLERIES

 • 56

  உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

  கிளாசிக், ஆனால் நளினம் மற்றும் நேர்த்தி – வெள்ளை டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ்  : கண்களுக்கு உறுத்தாத, ஆனால் பார்ப்பதற்கு மிக மிக அழகான நேர்த்தியான ஒரு ஆடை அணிய வேண்டும் என்றால் கிளாசிக்காக கருதப்படும் வெள்ளை நிற மேலாடை மற்றும் புளூ நிற ஜீன்ஸ் அணியலாம். ஆண்களுக்குத் தான் இந்த நிறம் அட்டகாசமாக இருக்கும் என்றல்ல, பெண்களுக்கும் இது மிக மிக பொருத்தமாக இருக்கும்.

  MORE
  GALLERIES

 • 66

  உங்க காதலரை பார்க்க போறீங்களா..? இந்த ஆடைகளை அணிந்து அசத்துங்க..

  ஃபார்மல் சூட்  : ஒரு பார்மலான ஒரு டேட் நைட்க்கு செல்ல போகிறீர்கள் என்றால் ஒரு ஃபார்மல் சூட் அல்லது பிளேசர், பேண்ட் உள்ளிட்ட ஆடைகளை தேர்வு செய்யலாம். இது உங்களை ஸ்டைலிஷான தோற்றமுள்ளவராக காண்பிக்கும்.

  MORE
  GALLERIES