கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்பும் பல பெண்கள் Work From Home-இல்தான் இருக்கின்றனர். ஆரம்பத்தில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும் தற்போது இதை சமாளிக்கக் கூடிய வகையிலான மாற்றமாகிவிட்டது. ஒர்க் ஃபிரம் ஹோமில் இருக்கும் பெண்கள் வீட்டில் சமையல் வேலை, பிள்ளைகளை கவனித்தல், அதோடு அலுவலக வேலை என பல விஷயங்களை செய்கின்றனர். இதற்கிடையில் தங்களுடைய ஆரோக்கியத்தை கவனிக்க மறந்துவிடுகின்றனர். ஏன் வீட்டிலேயே இருப்பதால் பிசியான ஷெட்யூல்களுக்கு நடுவே தன்னை அலங்கரித்துக்கொள்ள கூட முயல்வதில்லை.
ஆனால் வேலைக்கு செல்லும்போது மேட்சிங் மேட்சாக அணிந்து சென்ற நாட்களையும் மறந்துவிடக் கூடாது. வீட்டில் இருந்தாலும் தங்கள் மீதும் கவனம் செலுத்துவது அவசியம். அதுதான் உங்கள் நம்பிக்கைக்கான பக்கபலம். அந்த வகையில் வீட்டில் இருக்கும்போது பிரா அணிவது சற்று சிரமமாக இருக்கலாம். சில பெண்கள் பிரா அணிவதையே வெறுக்கலாம்.
மென்மையாக காட்டன் பிரா : காட்டன் பிராக்களை வேலைக்கு செல்லும் நாட்களை தவிர்த்த் வீட்டில் இருக்கும்போது ரிலாக்ஸாக இருக்க அணிந்திருப்பீர்கள். ஆனால் தற்போது முழு நேரமும் வீட்டில்தான் இருப்பதால் இந்த காட்டன் பிராக்களுக்கு மாறுவது சிறந்ததாக் ஐடுக்கும். இந்த காட்டன் பிராக்கள் நைட்டி, டீ.ஷர்ட் என எல்லா விதமான வீட்டில் அணியக் கூடிய ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.