“சேலைக் கட்டும் பெண்ணுக்கு ஒரு வாசம் உண்டு “ என்பார்கள். ஆம் அதற்கேற்றால் போல் தான் மற்ற எந்த ஆடைகள் அணிந்தாலும், புடவைக்கு உள்ள அழகை யாராலும் அடித்து கொள்ளமுடியாது. புடவைகளை அணிந்திருக்கும் பெண்கள் மற்றவர்களின் பார்வைக்கு மங்களகரமாகவும், அழகாகவும் தெரிவார்கள். ஆனால் இன்றைக்கு புடவைக் கட்டுவதா? அய்யோ வேண்டாம்.. தேவையில்லாமல் நேரத்தை வீணடிக்க முடியாது என்று கூறும் வார்த்தைகள் தான் அதிகம் உச்சரிப்பாகிறது.
இந்த சூழலில் தான், சமீப காலங்களாக சேலை அணிவதில் பெண்கள் ஆர்வம் காட்டத்தொடங்கிவிட்டனர். அதுவும் எப்படித் தெரியுமா? இது குறித்து women. India.com -இன் தலைமை ஆடை வடிவமைப்பாளரான பிரியங்கா பிரியதர்ஷினி கூறுகையில், தற்போது மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீன அவதாரத்துடன் சேலைகள் வடிவமைக்கப்பட்டுவருவதாகத் தெரிவிக்கின்றர். மேலும் இந்த புடவைகள் அதிகப்படியான வெயிட் இல்லாமல் மற்றும் நேரத்தை வீணடிக்காத வகையில் சுலபமாக கட்ட முடியும் என்பதால் இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான ஒன்றாகிவிட்டது.
ஆம்.. ஆடை வடிவமைப்பாளர்கள் தெரிவிப்பதைப்போன்று இன்றைய தலைமுறையினருக்கு ஏற்றவாறு பிளேஸருடன் சேலை(Saree with a Blazer), பிகினி மேல் புடவை (Saree over a Bikini Top),சட்டையுடன் சேலை( Saree with a Shirt), பாவாடையாக புடவைகள் (Saree with a Shirt) கிமோனோவுடன் சேலை (Saree with a Kimono) என விதவிதமான மாடல்களில் கிடைக்கின்றது. இது போன்ற மாடல் புடவைகளைப் பெண்கள் நண்பர்களுடன் பார்டிக்கு செல்வது முதல் முக்கியமான விழாக்களிலும் கட்ட ஆரம்பித்துவிட்டனர்.
குறிப்பாக சினிமா பிரபலங்கள், ஆடை வடிவமைப்பாளர்கள், பாலிவுட் பிரபலங்கள் அனைவரும் அனைத்து விருது வழங்கும் விழாக்களிலும் கட்ட ஆரம்பித்ததோடு அதனை சோசியல் மீடியாவிலும் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக மின்சார கனவு நாயகி கஜோல், கரிஷ்மா கபூர் போன்றவர்களும் நாகரீக வடிவிலான புடவைகளை அணிந்து அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகின்றனர்.
இன்றைக்கு புடவைகள் பல்வேறு நவீன அவதாரங்களில் வடிவமைக்கப்பட்டு வருகின்றனர். இவை அணிபவரை அழகாகவும், நேர்த்தியாகவும் காட்டுகிறது என கூறப்படுகிறது. இப்படி என்ன தான்? விதவிதமான ஆடை நாகரிகங்கள் அதிகரித்துவந்தாலும், பழைய மாடல்களில் அணியும் புடவைகள் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் இதனை நிச்சயம் நாம் அடுத்த தலைமுறைக்காவது கொண்டு செல்ல முயற்சி செய்து பார்க்க வேண்டும்.