ஸ்டைல் என்ற ஒரு வார்த்தை இல்லாமல் ஆண்களின் அழகு குறித்த விவாதத்தை நீங்கள் முன்னெடுக்க முடியாது. உங்கள் பெர்சானிலிட்டி எப்படிப்பட்டது என்பதையும், நீங்கள் யார் என்பதையும் முடிவு செய்வது உங்கள் ஆடைகள் தான். அனேகமாக ஒவ்வொரு விழாவுக்கும் அல்லது நிகழ்வுக்கும் நாம் மிக நேர்த்தியாக உடையணிந்து சென்று நிற்பதையே விரும்புகிறோம்.
ஒரு ஆண் தன்னுடைய தனிப்பட்ட ஸ்டைலை வெளிக்காட்டுவதற்கு மிகவும் உதவிகரமாக இருப்பது கேஷுவல் ஆடைகள் தான். வீட்டை விட்டு வெளியே செல்லும் ஒவ்வொரு முறையும் நாம் மிக சிறப்பான ஆடைகளை அணிய வேண்டும் என்பதில். ஆனால், நாம் தேர்வு செய்யும் ஆடைகள் நமக்கான குறைந்தபட்ச ஸ்டைலை வெளிக்காட்டுவதாக அமைய வேண்டும். குறிப்பாக விசேஷமான இடங்களுக்கு செல்லும்போது நம் உடைகளின் தேர்வில் தனிக் கவனம் செலுத்த வேண்டும். கூட்டத்தில் எத்தனை பேர் இருந்தாலும், நாம் தனித்து தெரியும் வகையில் நமது உடை அலங்காரம் இருக்க வேண்டும்.
சரியான உடையை தேர்வு செய்தல் : உங்கள் உடலுடன் மிக இறுக்கமாக ஒட்டிக் கொள்ளும் ஆடைகளை தேர்வு செய்யாதீர்கள். நீங்கள் தேர்வு செய்யும் ஆடை நேரடியாக உங்கள் உடலில் ஒட்டிக் கொள்ளும் என்றால் வியர்வை சுரக்கும் நேரங்களில் அது உங்களுக்கு அசௌகரியகத்தை கொடுக்கும். அடர்ந்த நிறம் உடைய ஆடைகளை நீங்கள் மாலை அல்லது இரவு நேரத்தில் அணியலாம். பகல் நேரத்தில் லேசான நிறம் கொண்ட சாதாரண உடைகளை தேர்வு செய்யவும். ஏனென்றால் அடர்ந்த நிறம் கொண்ட உடைகளை சூரிய ஒளியை ஈர்த்து உடலில் வியர்வை சுரக்க காரணமாக அமையும்.
கூல் அக்ஸசரீஸ் பயன்படுத்தலாம் : நீங்கள் ஸ்டைலான உடையை அணிந்த பிறகும், உங்கள் தோற்றம் சிறப்பானதாக தோன்றவில்லை என்றால், உடைகளுக்கு ஏற்ற கூலிங் அக்ஸசரீஸ் பொருட்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, சரியான பொருத்தம் கொண்ட சன் கிளாஸ் அணிவது உங்கள் தோற்றத்தை பிரம்மாண்டமானதாக காட்டும். உங்கள் கண்களுக்கும் அது நன்மை பயக்கும். இது தவிர கர்சீஃப் மற்றும் லேப்பள் பின் போன்றவற்றையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.