இந்த மாசி மாதம் திருமணாம் முகூர்த்தங்கள் அதிகமாக உள்ள மாதம் ஆகும். அதனால் மக்கள் அதிகமாக தங்கம் வாங்குவார்கள். ஆனால் தங்க நகைகளை வாங்கும் போது நாம் அனைவருமே சில பொதுவான தவறுகளை செய்துக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த சிறிய தவறு பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் தங்க நகைகளை வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய சிலவற்றை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தங்கத்தின் தூய்மை அளவை அறிந்து கொள்ளுங்கள்: தங்கத்தின் தூய்மை கேரட் எனப்படும் அலகால் குறிக்கப்படுகிறது. 24 காரட் தங்கம் 99.9 சதவீதம் தூய்மையாகவும் 22 காரட் தங்கம் 92 சதவீதம் தூயதாகவும் இருக்கும். அதன் தூய்மையை சரி பார்க்காமல் தங்க நகைகளை நீங்கள் வாங்கக்கூடாது. 24 காரட் தங்கம் மிகவும் மிருதுவானது என்பதால் தங்க நகைகளாக பயன்படுத்த முடியாது. அதனால்தான் தங்க நகைகளை செய்ய வெள்ளி, செம்பு, நிக்கல் மற்றும் துத்தநாகம் போன்றவை கலந்த 14 காரட், 18 காரட், மற்றும் 22 காரட் தங்கம் பயன்படுத்துகிறது.
தங்கம் செய்வதற்கான செய்கூலி: தங்க நகை தயாரிக்கும் போது ஏற்படும் செய்கூலி மற்றும் சேதாரங்கள் நகையின் விலையுடன் சேர்க்கப்படுகின்றன. அந்த நகைகளின் செய்கூலி அந்த குறிப்பிட்ட நகையில் உள்ள டிசைகள் மற்றும் அவை இயந்திரத்தால் செய்யப்பட்டவையா அல்லது கைகளால் செய்யப்பட்டவையா என்பதைப் பொருத்தே அமையும். மனிதனால் தயாரிக்கப்பட்ட நகைகளை விட மெஷினில் செய்யப்பட்ட நகைகள் விலை குறைவானதாக இருக்கும். எனவே அதை கூர்ந்து கவனிக்க வேண்டியது அவசியம்.
கற்கள் உள்ள நகைகளை கவனித்து எடை போட வேண்டும் : இந்தியாவில் பெரும்பாலான தங்க நகைகள் எடை போட்டு விற்பனை செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் அதிக எடை உள்ள நகைகள் விலை அதிகமாக கணிக்கப்படுகிறது. வைரங்கள் மற்றும் மரகதங்களைப் போன்ற விலையுயர்ந்த கற்கள் பெரும்பாலும் தங்க நகைகளில் சேர்க்கப்படுகின்றன, இதனால் அவை அதிக எடையை காட்டும். எனவே நீங்கள் கற்கள் உள்ள நகைகளை வாங்கும் போது, அவற்றை நீக்கினால எவ்வளவு எடை வருமோ அதற்கு மட்டுமே பணம் செலுத்த வேண்டும். இதனை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் தங்கம் வாங்கும்போது கவனிக்க தவறி விடுகிறோம்.