முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

கோடை வெயிலில் எங்காவது வெளியே செல்கிறீர்களாக ஒரு ஜோடி மினிமலிஸ்ட் ஸ்னீக்கர்கள் உங்கள் தோற்றத்தை மெருகேற்றி காட்ட உதவும், அதே வேளையில் கோடை காலத்தில் அணிய வசதியாகவும் இருக்கும்.

  • 17

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    சுட்டெரிக்கும் கோடை வெயிலியிடம் இருந்து தப்பிக்க சன் கிளாஸ், குடை, கோர்ட், ஸ்கார்ப், தொப்பி, சன்ஸ்கிரீன் லோஷன்கள் ஆகியவற்றுடன் சம்மர் ட்ரெண்டுக்கு ஏற்ற காலணி வகைகளும் முக்கிய இடம் பிடிக்கின்றன. நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்து பார்க்கில் ரிலாக்ஸ் செய்தாலும் சரி, வீக் என்டில் பீச்சில் கூலாக காற்று வாங்கினாலும் சரி உங்களுக்கு உடைக்கு பொருத்தமான காலணிகள் அவசியம்.

    MORE
    GALLERIES

  • 27

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    கோடை வெயிலில் எங்காவது வெளியே செல்கிறீர்களாக ஒரு ஜோடி மினிமலிஸ்ட் ஸ்னீக்கர்கள் உங்கள் தோற்றத்தை மெருகேற்றி காட்ட உதவும், அதே வேளையில் கோடை காலத்தில் அணிய வசதியாகவும் இருக்கும். நீங்கள் இன்னும் வீட்டிலிருந்து வேலை செய்கிறீர்கள் என்றால், ஸ்டைலான ஜோடி ஸ்லிப்-ஆன் ஷூக்கள் பொருத்தமாக இருக்கும்.

    MORE
    GALLERIES

  • 37

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    இருப்பினும், இந்த சீசனில் நீங்கள் எங்கு சென்றாலும், வெப்பத்தைத் தணிக்கவும், கால்களை சுவாசிக்க வைக்கும் வகையிலும் இருக்கக்கூடிய காலணிகள் அவசியம். எனவே கோடை காலத்திற்கு ஏற்ற, அதே சமயத்தில் லேட்டஸ்ட் ட்ரெண்டிங்கில் உள்ள காலணிகளை எவ்வாறு தேர்வு செய்வது என பார்க்கலாம்...

    MORE
    GALLERIES

  • 47

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    1. காலணி தேர்வு: கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவே, இந்த சமயத்தில் பாதங்களை முழுமையாக கவர் செய்திருப்பது போன்ற காலணிகளை தவிர்ப்பது நல்லது. நாம் பெரும்பாலும் பொருளின் விலையை மட்டுமே கருத்தில் கொள்கிறோம். மாறாக, காலணிகளின் விலை, தரம், வசதி மற்றும் வானிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு ஒட்டுமொத்தமாக மதிப்பிட வேண்டும். இந்த கோடையில், பல்வேறு டிசைன்களில் பிரகாசமான மற்றும் வண்ணமயமான காலணிகள் விற்பனைக்கு வருகின்றன. கோடையில், ஹை ஹீல்ஸ் மற்றும் ஸ்ட்ராப்பி ஷூக்களை அணியலாம், இவை அழகாக இருப்பது மட்டுமல்ல, உங்கள் கால்களை சுவாசிக்க கூடியதாகவும் வைத்திருக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    2. காலணிகளின் தரம்: முதுகு, முழங்கால் மற்றும் தோள்பட்டை வலி போன்ற பல உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் தவறான காலணிகளைத் தேர்ந்தெடுப்பது காரணமாக அமைகிறது. தோற்றம் கவர்ச்சிகரமானதாக இருப்பதால் பெண்கள் பொதுவாக ஹை ஹீல்ஸ் செருப்புகளை அணிவதை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் வியர்வை, சிவத்தல், புண் மற்றும் காயங்களில் இருந்து உங்கள் பாதத்தைப் பாதுகாக்க மென்மையான, கடினமான அடித்தளத்தைக் கொண்ட காலணிகளை தேர்வு செய்ய வேண்டும்.

    MORE
    GALLERIES

  • 67

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    3. காலணி அணிவதன் செளகரியம்: காலணிகள் பார்ப்பதற்கு மட்டுமல்ல அணிவதற்கும் செளகரியமானதாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு எளிதில் கழட்ட முடியாத ஷூக்கள் அல்லது செருப்புகளை அணிவது மிகுந்த அசெளகரியத்தை உருவாக்கும். குறிப்பாக கோடை காலத்தில் அனைவரும் சுற்றுலாவிற்கு திட்டமிடுவது வழக்கம். அப்படிப்பட்ட நீண்ட தூர பயணத்தின் போது எளிதில் கழட்டவும், தேவையான போது விரைவாக அணிந்து கொள்ளவும் கூடிய காலணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் பயணத்தை வசதியாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற, திறந்த ஸ்ட்ராப்பிகள் மற்றும் இறுக்கமாக கால்களை பற்றிக்கொள்ளக்கூடிய காலணிகளை தேர்வு செய்யலாம்.

    MORE
    GALLERIES

  • 77

    கோடைக்காலத்தில் ஷூ அணிவது சிரமமா..? இந்த கூலான டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

    4. பாதத்தை மூடும் காலணிகள் வேண்டாம்: கோடைக் காலத்தின் கடுமையான வெப்பத்தில், பூட்ஸ் அல்லது முழுமையாக பாதங்களை மூடக்கூடிய காலணிகளை அணிவதைத் தவிர்க்கவும், இது சொறி, கால் சிவந்து போதல் மற்றும் வியர்வை காரணமாக அதிக வலியை ஏற்படுத்தும். மேலும் இறுக்கமான காலணிகளால் உருவாகும் வியர்வை கடுமையான துர்நாற்றத்தையும் ஏற்படுத்தும். சுட்டெரிக்கும் வெப்பத்தில் இருந்து பாதங்களை விடுவிக்க இரத்தம் மற்றும் காற்றின் சுழற்சியை உறுதி செய்யும் வகையில் செருப்புகள் அல்லது செப்பல்களை அணிய முயற்சியுங்கள்.

    MORE
    GALLERIES