முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

Summer Outfits : சம்மருக்கு எந்த மாதிரியான உடைகளை அணிவது என்று தேடிட்டு இருக்கீங்களா ? உங்களுக்கான பதிவு தான் இது.

 • 15

  சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

  நீங்கள் வீட்டிலேயே இருக்கும் நபராக இருந்தாலும் சரி, இல்லை வேலைக்கு செல்பவராக இருந்தாலும் சரி இந்த வெயில் காலத்தில் சௌகரியமான உடைகளை தேர்ந்தெடுப்பது அவசியம். நீங்கள் மாடர்னாக உடை அணிய விரும்புவர் என்றால் உங்களுக்கான சில சம்மர் அவுட் ஃபிட் ஆப்ஷன்களை இங்கே கொடுக்கிறோம்.

  MORE
  GALLERIES

 • 25

  சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

  1.டேங்க் டாப் (Tank Top) : டேங்க் டாப் சம்மருக்கு ஏற்ற ஒரு பர்ஃபெக்ட் ஆடையாக இருக்கிறது. இதை சௌகரியமாக இருப்பதோடு பக்கா மாடர்னாகவும் இருக்கும். உங்களுக்கு சிலீவ் லெஸ் டாப் மட்டும் அணிவது சௌகரியமாக இருக்காது என்றால் இதை ஜாக்கெட், பிளேசர் , லாங் ஷ்ரக், ஷார்ட் ஷ்ரக், டெனிம் ஜாக்கெட், லெதர் ஜாக்கெட் என பல மேட்ச்களை நீங்களே ட்ரை செய்து பாக்கலாம். பிளேசர், டெனிம் ஜாக்கெட்களை அணியும் போது உங்களுக்கு ஃபார்மல் லுக் கிடைக்கும். நீங்கள் அணியும் ஆடைகளை மெறுகேற்ற அணிகலன்கள் அவசியம் என்பதை மறந்துவிடாதீர்கள். உடைக்கு ஏற்றது போல கோல்டன் அல்லது சில்வர் ஜுவல்லரியை அணியலாம்

  MORE
  GALLERIES

 • 35

  சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

  2.கஃப்டான் ட்ரெஸ் (kaftan dress): கஃப்டான் உடை என்பது மிகவும் லேசாகவும்,சுவாசிக்கக்கூடிய இலகுர துணிகளான காட்டன்,கைத்தறி துணிகளில் தயாரிக்கப்படுகிறது. இது சம்மருக்கு ஏற்ற ஆடையாகும்.வெயில் கொளுத்தும் நாட்களில் கஃப்டான் உடை என்பது சிறந்த தேர்வாக இருக்கும். உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப லாங் அல்லது ஷார்ட் கஃப்டானை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்

  MORE
  GALLERIES

 • 45

  சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

  3.க்ராப் டி-ஷர்ட் ( Crop T shirt ): சம்மர் அவுட் ஃபிட்க்கான சிறந்த தேர்வாக க்ராப் டி-ஷர்ட் இருக்கும். இதில் நீங்கள் கிராஃபிக் டி ஷர்ட், பிளேன் டி ஷர்ட் இப்படி உங்களுக்கு பிடித்த டி ஷர்ட்களை அணிந்துக்கொள்ளலாம். க்ராப் டி ஷர்ட் உடன் கலர்ஃபுல் பலாசோ பாண்ட்ஸ், ஜீன்ஸ் அல்லது ரிப்டு பாண்ட்ஸ் ஆகியவை மேட்ச் செய்யலாம். இந்த மாதிரி உடைகள் அணியும் போது காலணிகளில் கவனம் செலுத்தி ட்ரெண்டாக அணிந்தால் மொத்த லுக்கும் பார்ப்பவர்களின் கண்களை பறிக்கும்.

  MORE
  GALLERIES

 • 55

  சம்மர் ஃபேஷன் : கொளுத்தும் வெயிலுக்கு ஏற்ற ஸ்டைலிங் டிப்ஸ்..

  4.டூனிக் ட்ரெஸ் (Tunic dress) : டூனிக் ட்ரெஸ் என்பது அனைவரின் வாட்ரோபிலும் கட்டாயம் இருக்க வேண்டிய ஒன்று. இந்த உடைகள் ஸ்டைலிஷாகவும், சௌகரியமாகவும் இருக்கும். டூனிக் ட்ரெஸ் உடன் காட்டன் பேண்டை அணியலாம் அல்லது உங்களுக்கு பிடித்தவாறு ஸ்டைல் செய்துக்கொள்ளலாம். இந்த உடைகள் அணியும் வொயிட் ஸ்னீக்கர்ஸை அணிய மறக்காதீர்கள்..

  MORE
  GALLERIES