Mustache styles : ஓல்ட் ஃபேஷனாகி போன ஸ்டைல் தாடி... இது தான் இப்போ ட்ரெண்ட்..!
மெல்லிய தாடி, அடர் தாடி, ஷேப் செய்யப்பட்ட தாடி என கடந்த சில வருடங்களாக தாடி ஃபேஷன் ஆண்களின் ஸ்டைல் லுக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
Web Desk | March 25, 2021, 4:01 PM IST
1/ 5
முறுக்கு மீசையும், அழகாக ஷேப் செய்யப்பட்ட தாடியும் ஆண்களுக்கு எப்போதுமே ஒரு தனி அழகை தரும். காலத்திற்கு ஏற்ப அவ்வப்போது உடைகளில் மட்டுமல்ல, உருவத்திலும் கூட ஃபேஷன்கள் மாற்றி கொண்டே தான் இருக்கிறது. மெல்லிய தாடி, அடர் தாடி, ஷேப் செய்யப்பட்ட தாடி என கடந்த சில வருடங்களாக தாடி ஃபேஷன் ஆண்களின் ஸ்டைல் லுக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
2/ 5
ஏற்கனவே 1980 மற்றும் 90-களில் இருந்த மீசை ஸ்டைல்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஆண்களுக்கு தாடி மீதான மோகம் அதிகரித்தது. ஃபேஷன் என்பது பழைய ஸ்டைல்கள் சிறிய மாற்றங்களுடன் மீண்டும் புதிய லுக்கில் வருவது வழக்கமான ஒன்று. தாடி மீதான மோகம் ஒருபக்கம் இருந்தாலும் மெலிதான அல்லது அடர்ந்த முறுக்கு மீசை அல்லது கீழ்நோக்கிய மீசை உட்பட பல ஸ்டைல் மீசைகள் தற்போது மீண்டும் டிரெண்டாகி தாடிக்கு கடும் போட்டியை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் கூட #BreakTheBeard என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது.
3/ 5
பாலிவுட் பிரபலங்களான ரன்வீர் சிங், ராஜ்குமார் ராவ், ஹிமான்ஷ் கோஹ்லி உள்ளிட்ட பலரும் தாடியின்றி ஸ்டைல் மீசை வைத்து கலக்கி வருகின்றனர். நடிகர்கள் மட்டுமின்றி பல முன்னணி விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் என பலரும் தாடியின்றி ஸ்டைல் மீசை வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பொதுவாக போலீஸார் பலரும் கம்பீரமான மீசை வைப்பார்கள். மீசை பெரிதாக வளர்ப்பது ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனாலும் மீசை என்பது ஒருவரது ஆளுமையை குறிப்பாக காவலர்களின் அதிகரித்து காட்டுகிறது.
4/ 5
மீண்டும் மீசை : ஆண்களின் ஸ்டைல் லுக் உலகை சமீப ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்த போதும் திடீரென தாடியில்லா மீசை லுக் ட்ரெண்டாக முக்கிய காரணமாக கூறப்படுவது பராமரிப்பு தான். தாடியை வளர்ப்பது, அதை பராமரிப்பது, அவ்வப்போது அதை ஷேப் செய்வது என மெனக்கெட்டு கொண்டே இருக்க வேண்டும். தவிர தடி இப்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் வைத்திருக்க கூடிய பொதுவான ஸ்டைல் ஆகிவிட்டது. ஆனால் மீசை வளர்க்கவும், பராமரிக்கவும் ஈஸியாக இருப்பது காரணமாக இருக்கிறது.
5/ 5
பெண்களின் பார்வை : உருவத்திற்கேற்ப அழகான ஸ்டைலான மீசையுடன் இருக்கும் தோற்றம் ஆண்களுக்கு ஒரு அதிநவீன விளிம்பை கொடுப்பதாக பெண்கள் கருதுவதாக ஆய்வு ஒன்று சொல்கிறது. மேலும் கருத்து தெரிவித்துள்ள பெண்கள் தாடியுடன் சேர்த்து மீசை வைத்திருக்கும் ஆண்களை விட, தாடியை கிளீன் ஷேவ் செய்து மிருதுவான மீசை லுக்கில் இருக்கும் ஆண்கள் மனதை கொள்ளை கொள்வதாக கூறி உள்ளனர். ஒருவேளை நீங்கள் தாடியை ஸ்டைலாக வளர்ப்பவராக இருந்தால் இனி மீசை ஸ்டைல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.