இந்த விழா காரணமாக முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீடு முழுவதும் பூக்கள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த நிச்சயதார்த்த விழா குஜராத் குடும்பங்களில் பின்பற்றப்படும் Gol Dhana மற்றும் Chunari Vidhi சடங்குகளுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. முன்னதாக கணபதி பூஜை செய்யப்பட்டு முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாரம்பரிய வழக்கத்தின் படி திருமண நிச்சயம் செய்ததற்கான பத்திரிக்கை வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் ஆகியோர் மோதிரம் மாற்றிக்கொண்டனர். பின்னர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் புகைப்படங்களை எடுத்துக்கொணடனர்.
அதிக கவனம் பெற்ற மணமக்களின் உடைகள் : ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நடைபெற்ற நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் ராதிகா மெர்ச்சன்ட் அணிந்திருந்த லெஹங்கா அனைவரையும் கவர்ந்தது. இதனை பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்திருந்தார். லெஹங்காவில் டோன் எம்பிராய்டரியில் ஜரிகை வேலைப்பாடு மற்றும் குஞ்சம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
ராதிகாவின் உடை மட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த நீளமான ஹெவி வைர நெக்லஸ், நெற்றிச்சுட்டி, ஜிமிக்கி, மோதிரங்கள் என அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. தங்க நிறத்துடன் கூடிய உடையில் இருந்த மணப்பெண்ணுக்கு ஜோடியாக ஆனந்த் அம்பானியும் நீல நிற குர்தா செட்டில் மேடையில் தோன்றியது இருவருக்கும் வசீகரமான தோற்றத்தை அளித்தது. இருவரும் ஒன்றாக தங்கள் உறவினர்களை அன்புடன் மேடைக்கு வரவேற்றனர்.
அம்பானி குடும்பத்தினர் அணிந்திருந்த உடை : நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் மணமக்கள் மட்டும் அல்லாது வழக்கம் போல் ஒட்டுமொத்த அம்பானி மற்றும் வீரேன் மெர்ச்சன்ட் குடும்பங்கள் ஆடம்பர ஆடைகள், நகைகள் போன்றவற்றை அணிந்து அசத்தினர். மணமகன் ஆனந்த் அம்பானியின் தாயார் நிடா அம்பானி மற்றும் அம்பானியின் சகோதரி இஷா அம்பானி அணிந்திருந்த பாரம்பரிய உடைகளும் ஜானி , சந்தீப் கோஸ்லா வடிவமைத்துள்ளனர். ஈஷா அம்பானி பிரமல் அணிந்திருந்த இந்தோ-வெஸ்டர்ன் சில்ஹவுட் பிரமிக்க வைக்கும் விதமாக இருந்தது. ஷ்லோகா ஒரு பளபளப்பான ஐவரி லெஹங்கா செட்டை தேர்ந்தெடுத்தார். மேலும் ஆகாஷ் அம்பானி மயில் பச்சை குர்தா செட்டில் ஸ்டைலாகத் தோற்றமளித்தார்.
முன்னதாக நடைபெற்ற மெஹந்தி விழாவிலும், மணப்பெண்ணான ராதிகா மெர்ச்சன்ட், அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைப்பில் உருவான இளஞ்சிவப்பு லெஹங்கா உடையில் ஜொலித்தார். மேலும் மணப்பெண் ராதிகா மெர்சண்ட் மரகதங்கள் நிரம்பிய போல்கி சோக்கர் நெக்லஸ், ஒரு நீண்ட தங்க நெக்லஸ், ஸ்டைலான ஜும்கிகளை அணிந்தும், குறைந்த மேக்அப் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கூந்தலுடன் மிக அழகாக தோற்றமளித்தார். இந்த நிச்சயதார்த்த விழாவில் சச்சின் டெண்டுல்கர், அஞ்சலி டெண்டுல்கர், ராஜ்குமார் ஹிரானி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதியரை ஆசிர்வதித்தனர்.