இந்திய பெண்களின் பாரம்பரிய உடையாக புடவை திகழ்கிறது. மேலும் நாடு முழுவதும் வெவ்வேறு மற்றும் தனித்துவமான வழிகளில் புடவைகள் வடிவமைக்கப்படுவதோடு, அதனை அணிந்து கொள்ளும் முறையும் மாறுபாடுகிறது. துடிப்பான வண்ணங்கள் மற்றும் பிரமிக்க வைக்கும் பிரிண்ட்கள் மூலமாக புடவை எப்போதுமே பெண்களின் ஆளுமையை பிரகாசிக்க வைக்கின்றன.
புடவைகள், தற்கால ஃபேஷன் ஆர்வலர்களின் ஆடையாகவும் மாறி வருகிறது, அவர்கள் சில தனித்துவமான டிரேப்பிங் ஸ்டைல்களைப் பின்பற்றுகிறார்கள், அவை புடவை அணிவதற்கான தனி லுக்கை கொடுக்கிறது. எத்தனை ஸ்டைல்களில் ஆடைகள் வந்தாலும், புடவைக்கு நிகரான ஸ்டைலிஷ் தோற்றத்தை வேறெதிலும் பெற முடியாது என ஃபேஷன் டிசைனர்கள் பலரும் கூறியுள்ளனர். தற்போதையை லேட்டஸ்ட் ட்ரெண்டிற்கு ஏற்ற தனித்துவமான மற்றும் ஸ்டைலான புடவை கட்டும் முறைகள் சிலவற்றை பார்க்கலாம்...
1. முந்தானை முன்புறம் வைத்து கட்டும் ஸ்டைல்: இது எளிமையான மற்றும் புதுமையான டிரேப்பிங் ஸ்டைல். முந்தானையை முதுகுக்கு பின்னால் தொங்க விடாமல், தோள் பட்டையின் மேல் பகுதியில் வைத்து பின் செய்து கொள்ளுங்கள், இப்போது அழகான பல்லு டிசைன் முன்னால் விழும். இதனால் நீங்கள் செம்ம கூல் மற்றும் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் லுக்கில் தோன்றமளிப்பீர்கள்.
2. பெல்ட் ஸ்டைல்: சமீப காலமாக திரைப்பிரபலங்கள் முதல் காலேஜ், டீன் ஏஜ் பெண்கள் வரை இந்த பெல்ட் ஸ்டைல் சாரி டிரேப்பிங் ட்ரெண்டாகி வருகிறது. பார்ட்டி, பர்த்டே ஃப்ங்கஷன், ரிஷப்ஷன் போன்ற நிகழ்ச்சிகளின் போது புடவையை இந்த முறையில் அணிந்து செல்லவே பெண்கள் அதிகமாக விரும்புகின்றனர். இந்த ஸ்டைலில், இடுப்பில் உங்கள் பல்லுவை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் விதமாக இடையில் பெல்ட்டை சேர்த்து அணிவார்கள். இடையில் புடவைக்கு மேட்சிங்காக அணியப்படும் பெல்ட், உங்களது புடவைக்கான தோற்றத்தை மேலும் மெருகேற்றி காட்ட உதவுகிறது.
3. ஜாக்கெட்/பிளேஸர்களுடன் டிரேப்பிங்: இந்தியாவை பொறுத்தவரை பிளேசர் என்பது அலுவலகங்களிலும், அலுவல் ரீதியான மீட்டிங்கின் போதும் மட்டுமே அணியப்படும் உடையாக உள்ளது. ஒரு பிளேசர் அல்லது ஜாக்கெட் உடன் புடவையை ஒருபக்கமாக டிராப்பிங் செய்யும் போது, நீங்கள் ஒரு தொழில்முறை டிசைனர் போன்ற கெத்தான தோற்றத்தை பெறலாம். இது உங்களுக்கு ஒரு அசாதாரண மற்றும் அசத்தலான லுக்கை கொடுக்கும்.
4. கவுன் ஸ்டைல் டிரேப்பிங்: இந்த ஸ்டைலில் புடவையின் முந்தானையை கீழே டிரேப்பிங் செய்யாமல், அப்படியே கழுத்தை சுற்றி அணிந்து கொள்ள வேண்டும். அத்துடன் உங்களுடைய ஹேர் ஸ்டைலையும் கொஞ்சம் கீழே இறங்கிக் கொண்டீர்கள் என்றால், புதுமையான பாணியில் ஸ்டைலாக மிளிரலாம். மார்டன் பெண்களுக்கு ஏற்ற இந்த சாரி ஸ்டைலை பின்பற்றும் போது, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அல்லது டியூப் டாப் அணிவது அசத்தலாக இருக்கும்.