ஸ்கார்ஃப் (scarf) என்பது பல வழிகளில் அணியக்கூடிய ஒரு ஃபேஷன் அக்சஸரீ பொருளாக உள்ளது. நீங்கள் எங்கு சென்றாலும் அல்லது நீங்கள் எவ்வித உடைகளை அணிந்தாலும் உங்கள் அலங்காரத்தை முழுமையாக பூர்த்தி செய்ய உதவுகிறது ஸ்கார்ஃப். உறைய வைக்கும் கிளைமேட்டில் இருந்து தப்பிக்க கழுத்தில் ஸ்கார்ஃபை சுற்றி கொள்ளும் காலம் இருந்தது. ஆனால் இந்த நவீன காலத்தில் பெண்கள் தங்கள் ஃபேஷனான ஆடைகளுக்கு அழகு சேர்க்க ஸ்கார்ஃபை பயன்படுத்துகின்றனர்.
உங்கள் ஸ்கார்ஃபை சரியான முறையில் பயன்படுத்துவது உங்களை நாகரீகமாக தோற்றமளிக்க செய்வதோடு மட்டுமல்லாமல் இந்த குளிர் சீசனில் நல்ல கதகதப்பையும் அளிக்கும். வரவிருக்கும் குளிர் சீசனை கருத்தில் கொண்டு உங்கள் கழுத்தில் ஸ்கார்ஃபை அணிவதற்கும் விஷயங்களை மாற்றுவதற்கும் சில ஸ்டைலான வழிகள் இங்கே உள்ளன. பொதுவாக ஸ்கார்ஃப்கள் பல வித டிசைன்களிலும், ஒவ்வொரு ஸ்டைலுக்கும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்ட அமைப்புகளிலும் கிடைக்கின்றன.
இந்த குளிர்காலத்தில் உங்கள் ஸ்கார்ஃப்களை ஸ்டைலாக அணிய உதவும் வழிகள் இங்கே : ஐரோப்பியன் வே : உங்கள் ஸ்கார்ஃபை பாதியாக மடித்து அதை உங்கள் கழுத்தில் போட்டு கொண்டு, ஸ்கார்ஃபின் ஒரு முனையை லூப்பை உருவாக்கும் வகையில் வைத்து கொண்டு, மேலே படத்தில் காண்பித்துள்ளதை போல அதன் மறுமுனையை அந்த இடைவெளியின் உள் வைத்து வெளியே இழுக்கவும். இந்த ஐரோப்பியன் லூப் ஸ்கார்ஃபை ஸ்டைலாக பயன்படுத்த ஒரு உன்னதமான வழி ஆகும்.
ட்விஸ்ட் : வருவது குளிர் சீசன் என்பதால் நீங்கள் டூ இன் ஒன் காரணத்திற்காக இந்த ட்விஸ்ட் ஸ்கார்ஃப் ஸ்டைலை பயன்படுத்தலாம். உங்கள் கழுத்தை மறைக்க மற்றும் குளிரில் இருந்து பாதுகாத்து கொள்ள, இந்த லுக்கை உருவாக்க உங்கள் ஸ்கார்ஃபை கர்வ் ஷேப்ஸ்களில் ட்விஸ்ட் செய்து அணியவும். இது பார்ப்பதற்கு ஃபேஷனாக இருக்கும் அதே சமயம் மற்றும் உங்களுக்கு குளிருக்கு பாதுகாப்பை வழங்கும்.
ஹேர் அக்சஸரி : ஸ்கார்ஃபை உடைகளுக்கு ஸ்டைலான ஒரு பொருளாக மட்டும் இல்லாமல் ஹேர் அக்சஸரியாகவும் கூட பயன்படுத்தலாம். வழக்கமான போனி-டெயில் ஹேர் ஸ்டைல் செய்து போரடித்து விட்டதா.!! மேலே உள்ள இமேஜை பாருங்கள். இந்த லுக்கை பெற உங்களது அழகான ஸ்கார்ஃபை எடுத்து கொண்டு அதை ரிப்பன் வடிவத்தில் கட்டி உங்களது தலைமுடியை சுற்றி முடிச்சு போட்டு கொள்ளுங்கள்.