க்காலம், குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் தொடங்கியாச்சு. இந்த காலநிலைக்கு ஏற்ப நாம் நம்முடைய ஆடைகளை மாற்றவில்லை என்றால், நிச்சயம் அடிக்கும் வெயிலை நம்மால் தாங்க முடியாது. ஆனால் என்ன? உடல் பருமனாக இருக்கும் பெண்கள் பிடித்த ஆடைகளை அணிவதற்கு தயக்கம் காட்டுவார்கள். எனவே பிளஸ்-சைஸ் பிரிவில் இருந்து ஷாப்பிங் செய்யும் பெண்கள், உங்கள் உடலமைப்பை மேம்படுத்தும் ஆடைகளைத் தேடுவது முக்கியம். இதோ எப்படிப்பட்ட ஆடைகள் உங்களது உடல் அமைப்பை மெல்லியதாக காட்ட உதவும் என்பது குறித்து இங்கே நாம் தெரிந்துக் கொள்வோம். கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடைகள்..
V-நெக்லைன்களைத் தேர்ந்தெடுத்தல் : ஆண்களை விட பெண்கள் ஆடை விஷயத்தில் மிகவும் கவனிப்புடன் இருப்பார்கள். இருந்தப்போதும் பருமனாக இருக்கும் சில பெண்கள் என்ன ஆடை அணிந்தால் நன்றாக இருக்கும்? என தேட ஆரம்பிப்பது வாடிக்கையான ஒன்று. இதுப்போன்று உங்களது உடல் அமைப்பை ஒல்லியாக காட்ட வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் வி- நெக்லைன் ( வி- கழுத்து) கொண்ட ஆடைகளை நீங்கள் தேர்வு செய்யலாம். இது உங்களின் உடலின் உடற்பகுதியை உயராக காட்டுவதோடு மெல்லிதான தோற்றத்தை உங்களுக்கு வழங்குகிறது.
ஏ-லைன் ஆடைகளைத் தேர்வு செய்தல் : ஏ – லைன் ஆடைகள் (a line dresses) சந்தேகத்திற்கு இடமின்றி அனைத்து பெண்களுக்கும் சிறந்த தேர்வாக அமையும். நீளமாக நீங்கள் அணியும் ஆடைகள் உங்களது இடுப்பை மெல்லியதாக காட்ட உதவுகிறது. எனவே கோடைக்காலத்திற்கு ஏற்ற ஆடையாக இருப்பதோடு உங்களது உடல் தோற்றத்தையும் மெல்லியதாக காட்ட உதவியாக உள்ளது.
வடிவ உடைகளைப் பயன்படுத்துதல்( use shape wears) : இன்றைக்கு உடல் பருமனாக இருக்கும் பெண்கள் கூட நினைத்த ஆடைகளை உடுத்த வேண்டும் என்று நினைத்தால் அவர்கள் தேர்ந்தெடுப்பது ஷேப் வியர்ஸ் தான். அதிலும் கோடைக்காலத்தில் காட்டன் சேலைகள் உடுத்தும் போது பருமனாகத் தெரியாமல் இருக்க வேண்டும் என்றால் இது நல்ல தேர்வாக இருக்கும். இடுப்பு, தொடை மற்றும் வயிற்றுப்பகுதியில் உள்ள உடல் கொழுப்பை குறைக்க இந்த ஆடை உதவியாக உள்ளது.