முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

உங்களை அழகாக காட்டுவதற்காகவே குறைந்த பட்ஜெட்டில் பல ஆடம்பர விஷயங்கள் உள்ளது. குறிப்பாக ஐப்ரோ, மெனிக்யூர், பெடிக்யூர் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம்.

  • 17

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    இன்றைக்கு உடை, நகை அலங்காரத்தில் அதிகளவில் பெண்கள் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டனர். இதற்காக பலர் விலையுயர்ந்த நகைகள் மற்றும் ஆடைகளை விரும்பினாலும், பலரால் நிச்சயம் வாங்கமுடியாது. இனி அந்த கவலை வேண்டாம். உங்களுடைய பட்ஜெட்டிலும் நீங்கள் ஆடம்பரமாக, அழகாகத் தெரிய வேண்டும் என்றால் இதை முயற்சி செய்துப் பாருங்கள்.. நிச்சயம் மற்றவர்களை விட ஸ்டைலாகத் தான் தெரிவீர்கள். இதோ என்னென்ன? என்பது குறித்து அறிந்துக் கொள்ளுங்கள்.

    MORE
    GALLERIES

  • 27

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    குறைந்த பட்ஜெட்டில் உங்களை அழகாக்கக்கூடிய விஷயங்கள்…
    தங்க நிற நகைகளில் முதலீடு: பெண்கள் அனைவருக்கும் தங்க நகைகள் வாங்க வேண்டும் என்ற எண்ணமும், ஆசையும் அதிகளவில் இருக்கும். ஆனால் அனைவரிடம் இந்த சூழல் அமைய வாய்ப்பில்லை. இந்த சூழலில் தான் நீங்கள் தங்க நகைகளுக்குப் பதிலாக தங்க நிறம் கொண்ட நகைகளை வாங்கி அணியலாம். இப்போது ஒவ்வொரு கடைகளிலும் விதவிதமான மாடல்கள் குறைந்த விலையிலும் விற்பனையாகிறது. ஐம்பொன், கவரிங் கோல்டு, சில்வர் கோல்டு என பல வெரைட்டிகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 37

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    சரியான நிறத்தை அணிதல் : உங்களுடைய பட்ஜெட்டிலும் நீங்கள் வித்தியாசமான தோற்றத்தைப் பெற வேண்டும் என்றால், நிறத்தைத் தேர்வு செய்வதில் கவனம் கொள்ளவும். நிச்சயம் தேர்வு செய்யும் ஆடைகள் தான் உங்களை அழகாக காட்டும். பழுப்பு, வெள்ளை, கருப்பு, சாம்பல், ஆலிவ் போன்ற கலர்கள் உங்களை அழகாகவும், ஆடம்பரமாகவும் காட்டும்.

    MORE
    GALLERIES

  • 47

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    உங்கள் அலங்காரத்தில் முதலீடு செய்யுங்கள் : உங்களை அழகாக காட்டுவதற்காகவே குறைந்த பட்ஜெட்டில் பல ஆடம்பர விஷயங்கள் உள்ளது. குறிப்பாக ஐப்ரோ, மெனிக்யூர், பெடிக்யூர் போன்றவற்றை நீங்கள் மேற்கொள்ளலாம். இது உங்களை குறைந்த செலவில் அழகாக வைத்திருக்கும்.

    MORE
    GALLERIES

  • 57

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    ஆடைகளில் கவனம் : குறைந்த செலவில் கூட தற்போது சந்தைகளில் விதவிதமான ஆடைகள் உள்ளது. இருந்தப்போதும் நீங்கள் தேர்வு செய்வதில் கவனமுடன் இருக்க வேண்டும். ஆன்லைனிலும் டிரெண்டியான ஆடைகள் உள்ளதால் குறைந்த விலையில் நீங்கள் வாங்கி மகிழலாம்.

    MORE
    GALLERIES

  • 67

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    கட்டமைக்கப்பட்ட பொருட்கள் (structured items) : உங்கள் பையில் இருந்து உங்கள் ஆடை வரை அனைத்தும் கட்டமைக்கப்பட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். கட்டமைக்கப்பட்ட பொருட்கள் மிகவும் மெருகூட்டப்பட்டதாகவும், தொழில் ரீதியாகவும் தோற்றமளிப்பதனால் அவை உங்களை மிகவும் ஸ்டைலாக காட்டும்.

    MORE
    GALLERIES

  • 77

    பெண்களே.. குறைந்த பட்ஜெட்டிலும் ஸ்டைலாக தெரிய வேண்டுமா..? உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்..!

    இதோடு பெரிய பெரிய ஷாப்பிங் மால்கள் மற்றும் கடைகளில் கூட உங்களது பட்ஜெட்டிற்கு ஏற்றவாறு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம். ஆடைகள் மற்றும் ஆபரணங்களில் நீங்கள் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் புதிய ஷேர்ஸ்டைல்களையும் நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொண்டால் நிச்சயம் டிரெண்டாக இருப்பீர்கள் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.

    MORE
    GALLERIES