வடிவம், நிறம், உயரம் என்று நம்முடைய உடல் எப்படி இருந்தாலும், அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உடலின் வடிவத்துக்கு ஏற்றவாறு ஆடைகள் அணிவது தோற்றத்தை மேம்படுத்தி கொடுக்கும். இருப்பினும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும், சௌகரியமாக உணரச் செய்யும். உடலின் வடிவத்தை மேம்படுத்தி இன்னும் அழகாக்கி காட்ட, ஷேப்வேர், சரியான நிறங்களை தேர்வு செய்து அணிவது, பளிச்சென்று போல்டான அக்சசரிஸ் அணிவது ஆகியவை உதவும்.
பேரிக்காய், ஆப்பிள், ஹவர்கிலாஸ் என்று ஒவ்வொரு உடலின் வடிவத்தையும் வகைப்படுத்த முடியும். அதில் லேசான தொப்பையுடன் ஆப்பிள் வடிவ உடல் பலருக்கும் உள்ளது. குறிப்பாக ஆப்பிள் ஷேப்பில் பெண்களின் உடல் இருக்கும் போது தொப்பையை மறைத்து தோற்றத்தை அழகாக வெளிப்படுத்த முயற்சி செய்கிறீர்களா? உங்களுக்கான டிப்ஸ் இங்கே.
அசிமெட்ரிட்கல் ஆடைகளை தேர்வு செய்யுங்கள் : ஹை-லோ ஆடைகள் சமீபத்தில் பிரபலமாக இருக்கின்றன. அசிமெட்ரிக்கல் (asymmetry) என்பது ஆடையின் முன்பக்க நீளம் குறைவாகவும், பின்பக்க நீளம் அதிகமாகவும் இருக்கும். அதே போல, ஆடையின் நீளம் ஒரே மாதிரியாக இருக்காது, பக்கவாட்டில் குறுகலாக, என்று வெவ்வேறு நீளத்தில் இருக்கும். இவ்வாறு அணிவது, ஸ்டைலான தோற்றம் கொடுக்கும் மற்றும் உங்களைப் கவனிப்பவர்களின் பார்வை ஆடை மீதே இருக்கும்.
மோனோகுரோம் டோன்களில் ஆடைகளை தேர்வு செய்யுங்கள்: மோனோக்ரோம் என்பது ஒரே நிறத்தில் அல்லது ஒரு டோனில் ஆடைகளை அணிவதாகும். குறிப்பாக, வெளிர் நீல நிறை ஆடைகளை எடுத்துக் கொள்ளலாம். வெளிர் நீலத்தில் மட்டுமே டாப்ஸ், பாட்டம் என்று அணிவது ஒரு ஸ்டைல். வெளிர் நீலத்தின் வேறு வேறு ஷேடுகளில் ஆடை அணிவது இன்னொரு ஸ்டைல். இது தலை முதல் கால் வரை ஒரே மாதிரியான தோற்றத்தைக் குறிக்கும். இது போல ஸ்டைலிங் செய்து கொள்வது, உங்களை உயரமாகவும், ஒல்லியாகவும் காண்பிக்கும்.
டைட்டாக அணியாமல் தளர்வாக அணியுங்கள்: ஆப்பிள் உடலமைப்பு இருப்பவர்கள், உங்கள் ஷேப்பை வெளிப்படுத்தும் டைட்டான ஆடைகளை அணியாமல், தளர்வாக அணியலாம். ஆடை இந்த வடிவில் இருக்கும் என்பதை வெளிப்படுத்தாமல் இருக்கும் ஃபலோயிங் உடைகள் தொப்பையை மறைக்க உதவும். உதாரணமாக, மாக்சி டிரஸ்சஸ் என்பவை மிகவும் பொருத்தமாக இருக்கும். நீங்கள் சல்வார், டாப்ஸ் அல்லது டியூநிக்ஸ் அணிந்தாலும் கொஞ்சம் தளர்வாக அணிந்தால் அழகாக இருக்கும்.
A-லைன் ஷில்லட்: A-லைன் ஸ்டைல் என்பது நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கும். அனார்கலி சூட் முதல் ஷராரா வரை இந்த ஸ்டைலில் பல விதமான ஆடைகளை உள்ளன. ஃபார்மல் ஆடைகளாக A-லைன் குர்த்தாக்கள் வேலைக்கு செல்லும் பெண்களால் மிகவும் விரும்பப்படுகிறது. ஸ்டைலான, நேர்த்தியான தோற்றத்தைக் கொடுப்பதால், இது தொப்பையை மறைக்கும்.