முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

ஒவ்வொரு விதமான ஆடைகளுக்கும் அதற்கு தகுந்த உள்ளாடை வகைகள் இருக்கிறது. ஆடைகளை தளர்வாக அணிந்தாலும், உள்ளாடைகளை குறிப்பாக பிராவை ஃபிட்டாக இருக்குமாறு அணிய வேண்டும்.

 • 17

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  ஆடைகளுக்கு எவ்வளவு நேரமும், பணமும் செலவு செய்து தேர்வு செய்கிறோமோ, அதேபோல நல்ல உள்ளாடைகளை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். உங்களுக்குத் தெரியுமா, ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை மார்பக அளவுகள் மாறும். அதே போல, நீங்கள் 2 கிலோ எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, மார்பக அளவும் வடிவமும் மாறும்.

  MORE
  GALLERIES

 • 27

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  உள்ளாடைகள் கச்சிதமாகவும், சௌகரியமாகவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு விதமான ஆடைகளுக்கும் அதற்கு தகுந்த உள்ளாடை வகைகள் இருக்கிறது. ஆடைகளை தளர்வாக அணிந்தாலும், உள்ளாடைகளை குறிப்பாக பிராவை ஃபிட்டாக இருக்குமாறு அணிய வேண்டும். இதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

  MORE
  GALLERIES

 • 37

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  தன்னம்பிக்கையை அதிகரிக்கும் : உங்களுக்கு கச்சிதமாக பொருந்தும் பிராவை அணியும் போது, உங்கள் போஸ்ச்சர் (Posture) மேம்படும். மார்பகங்கள் தளர்வாக தோன்றாமல், உடல் அமைப்பு நேர்த்தியாக இருக்கும். இதுவே உங்கள் உடல் மொழி மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நீங்கள் லூசான பிரா மற்றும் ஃபிட்டான பிராவை அணிந்து, எவ்வாறு வித்தியாசமாக உணர்கிறீர்கள் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 47

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  கூடுதல் சௌகரியம் : சரியான பிரா என்பது ஃபிட்டிங் மட்டுமல்ல, நல்ல தரத்திலான மற்றும் மென்மையான ஃபேப்ரிக்கையும் குறிக்கும். ஃபிட்டான, மென்மையான ஃபேப்ரிக் பிராவை அணியும் போது, தேவையில்லாமல் மார்பகங்கள் குலுங்காது, இதனால் நீங்கள் சௌகரியமாக உணர்வீர்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  தடையின்றி இயங்க முடியும் : உங்கள் உடல் அமைப்புக்கு பொருத்தமான பிராவை நீங்கள் அணியும் பொழுது வசதியாக உடற்பயிற்சி செய்யலாம், வேகமாக வேலைகளை செய்யலாம், எந்த விதமான டிஸ்கம்ஃபர்ட்டையும் உணர மாட்டீர்கள். உதாரணமாக இப்பொழுது உங்களுக்கு பொருத்தமில்லாத தளர்வான பிராவை அல்லது அளவில் சிறிய பிராவை நீங்கள் அணியும் பொழுது, மார்பகத்தின் ஒரு பகுதி பிரா கப்பிலிருந்து வெளிப்புறத்தில் இருக்கலாம். இது அசௌகரியமாக இருக்கும். சரியான ஃபிட்டிங் உள்ள பிராவில் இந்த பிரச்சனைகள் எதுவுமே இருக்காது.

  MORE
  GALLERIES

 • 67

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  முதுகு மற்றும் தோள்பட்டை வலியை குறைக்கும் : ஃபிட்டான, சரியான அளவில் ஷோல்டர் ஸ்டிராப் மற்றும் பேக் ஸ்ட்ராப் உள்ள பிரா என்ன செய்யும்? நீங்கள் டைட்டான அல்லது லூசான பிரா ஸ்ட்ராப்களைப் போட்டுக் கொண்டால் முதுகு மற்றும் தோள்பட்டையில் வலிக்கும். குறிப்பாக, தோள்பட்டையில் சரியாக ஸ்ட்ராப்களைப் போட்டுக்கொள்ளவில்லை என்றால், முதுகு வலி ஏற்படும், வசதியாக உணர மாட்டீர்கள். இதுவே, உங்களுக்கு பொருந்தும் ஸ்ட்ராப்கள் கொண்ட ஃபிட்டிங் பிராவில் இந்த பிரச்சனை இருக்காது.

  MORE
  GALLERIES

 • 77

  நல்ல ஃபிட்டிங்கான பிரா அணிவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா..?

  அசத்தல் தோற்றம் : ஒரு பிராவை சரியாக தேர்வு செய்து ஃபிட்டாக அணிவதன் மூலம் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. மேலும், உங்கள் தோற்றமும் மிளிரும், சரியான பிராவை அணியும் பொழுது மார்பகங்கள் தளர்வாக தெரியாமல், வடிவம் மேம்படுத்தப்பட்டு, எடுப்பாகத் தெரியும். அது மட்டுமல்லாமல் நீங்கள் அணியும் ஆடைகளுக்கு ஏற்ப உங்களுடைய உடலமைப்பு அசத்தலாக உங்கள் தோற்றத்தை வெளிப்படுத்தும். சேலை அணியும் போதும் சரி வெஸ்டர்ன் டாப்ஸ் அணியும் போதும் சரி, பிரா ஃபிட்டாக இல்லையென்றால் எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்துப் பாருங்கள்!

  MORE
  GALLERIES