வேலை பார்க்கும் அலுவலகத்திலோ அல்லது செய்யும் வேலையினாலும் ஒருவருக்கு ஏற்படும் மன அழுத்தம் ஆனது அவரின் வாழ்க்கையை பல விதங்களில் பாதிக்கக்கூடும்.பொதுவாக இது போன்ற மன அழுத்தம் மிகுந்த சூழலில் வேலை செய்யும் போது கார்டிசால் எனப்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் உடலில் சுரக்கிறது. இது மன அழுத்தத்தை சரிப்படுத்துவதற்கு உதவுகிறது. ஆனால் இந்த கார்ட்டிசால்கள் சுரப்பது அதிக அளவில் நடைபெற்றால் அது உடலில் சில பாதிப்புகளை உண்டாக்க கூடும்.இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சில குறிப்பிட்ட வழிமுறைகளை கடைப்பிடித்தாலே போதும்.
டீ மற்றும் காபி போன்றவைகளை குடிக்கலாம் : சூடான ஒரு கப் காபி அல்லது டீயை அவ்வபோது கிடைக்கும் இடைவேளை நேரங்களில் குடிப்பதன் மூலம் மன அழுத்தம் குறைவதாக பலர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக அடுக்கடுக்கான தொடர் அழைப்புகளினாலும், ஒன்றன்பின் ஒன்றாய் நடக்கும் மீட்டிங் ஆகியவற்றினாலும் ஏற்படும் மன அழுத்தத்தையும், உடல்சோர்வையும் இவ்வாறு டீ காபி குடிப்பதால் சரியாவதாக பலர் தெரிவித்துள்ளனர்.
நறுமணப் பொருட்களை பயன்படுத்தலாம் : சிலருக்கு நறுமண பொருட்களை நுகர்வதன் மூலம் அமைதியான மனநிலை ஏற்படுவதாக பலர் தெரிவித்துள்ளனர். முக்கியமாக வாசனைப் பொருட்களையும் எண்ணெய்களையும் பயன்படுத்தி அவற்றை நுகர்வதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்கும் அரோமோ தெரபி என்னும் சிகிச்சை முறையே வழக்கத்தில் உள்ளது. இதில் பிரபலமான நறுமணப் பொருட்களாகிய லாவண்டர், ரோஸ், சாண்டல் மற்றும் பல சமன்படுத்தப்பட்ட வாசனைப் பொருட்கள் நோயாளிக்கு கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் உடல் மனநிலை ஆகியவை முன்னேற்றம் அடைந்துள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர். எனவே வேலையில் நீங்கள் மன அழுத்தத்துடன் உணர்ந்தால் உங்களுக்கு பிடித்த நறுமணப் பொருட்களை நுகர்வதன் மூலம் அதனை சரி செய்யலாம்.
தேவையான அளவு ப்ரேக் எடுத்துக் கொள்ளலாம் : சில முக்கிய வேலைகள் முடிக்க வேண்டி இருந்தாலும் நீங்கள் மனச்சோர்வாக உணர்ந்தால் உங்களுக்கு தேவையான இடைவேளையை எடுத்துக் கொள்வதில் எந்த தவறும் இல்லை. உங்கள் மனதையும் உடலையும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளவும் மேலும் நல்ல செயல் திறனுக்கும் இந்த இடைவேளை உதவும். இடைவேளை நேரங்களில் உங்களுக்குப் பிடித்த பாடல் கேட்பதும் அல்லது மூச்சு பயிற்சி செய்வதும் தியானம் செய்வதும் கூட நீங்கள் செய்து பார்க்கலாம்.
4-7-8 என்ற மூச்சுப் பயிற்சி மேற்கொள்ளலாம் : உங்கள் நாக்கின் நுனியை வாயில் முன்பகுதியில் உள்ள மேல்பக்க பல்லின் மேல் சற்று அழுத்திக்கொண்டு மூக்கின் வழியாக 4 நொடிகள் வரை மூச்சை உள்ளே எடுக்க வேண்டும். பிறகு 7 நொடிகள் வரை மூச்சை அடக்கி பின்பு 8 நொடிகள் வரை வாயின் வழியாக மூச்சை வெளியிட வேண்டும். இதனைத் தொடர்ந்து செய்வதால் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன் அதிகமாக கிடைப்பதோடு உடலும் மனமும் புத்துணர்ச்சியோடு இருக்கும்.