ஒவ்வொரு ஆண்டும், இந்த பருவத்தில் மக்கள் பிஸியாக ஷாப்பிங் செய்வார்கள். வீடுகளை அலங்கரிப்பது, பலகாரங்கள் செய்வது என தீபாவளி வருகைக்காக ஆயத்தம் ஆவார்கள். இருப்பினும், கொரோனா தொற்றுநோய் இந்த ஆண்டு இந்த பண்டிகையை கொண்டாடும் மக்களின் உற்சாகத்தை ஓரளவு குறைத்துள்ளது. இருப்பினும் பல மாதங்களாக முடங்கி இருந்த வணிகம் சமீபத்தில் மீண்டும் தொடங்க ஆரம்பித்துள்ளது.
இந்த நிலையில் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதால், அரசாங்கத்தின் விதிமுறைகளின்படி வைரஸ் பரவுவதைத் தடுக்க பல பெரிய நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பல சுகாதார வல்லுநர்கள் மக்களை வீட்டுக்குள்ளேயே தங்கி விழாவைக் கொண்டாடுமாறு அறிவுறுத்தியுள்ளனர். எனவே, ஒளியின் பண்டிகையை பாதுகாப்போடு கொண்டாட சில குறிப்புகள் குறித்து காண்போம்.
2. விளக்குகளை ஏற்றுவதற்கு முன் சானிடைசர் பயன்படுத்த வேண்டாம்: அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்க எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள். விளக்கு, மெழுகுவர்த்திகளை ஒளிரச் செய்வதற்கு முன் மற்றும் பட்டாசுகளுடன் விளையாடுவதற்கு முன்பு சானிடைசர்களைப் பயன்படுத்த வேண்டாம். அவற்றில் ஆல்கஹால் இருப்பதால் எளிதில் தீ பிடிக்கலாம். எனவே, சுத்திகரிப்பாளர்களை தீ அல்லது விளக்குகளிலிருந்து விலக்கி வைப்பது நல்லது.