ஜாக்கி சான் ஒரு நடிகராக தனது வாழ்க்கையில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். சைனீஸ் ஸ்டாரான ஜாக்கி சான் உலகம் முழுவதும் உள்ள இளம் ரசிகர்களை கூட ஈர்த்துள்ளதற்கு முக்கிய காரணம் அவரது தற்காப்பு கலை நுட்பங்கள் மற்றும் ஃபிட்னஸ் உள்ளிட்ட விஷயங்களே. ஜாக்கி சானுக்கு தற்போது சுமார் 70 வயதாகிறது. ஆனாலும் தற்போதும் இவர் பராமரித்து வரும் ஸ்ட்ரென்த் மற்றும் ஃபிலெக்சிபிலிட்டி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சீட் டேஸ் : டயட்டை பின்பற்றும் ஒருவர் தான் உண்ணக்கூடிய உணவின் அளவு அல்லது வகைகளின் மீதான கட்டுப்பாடுகளை கருத்தில் கொள்ளாமல் இருக்கும் நாட்கள் cheat days என குறிப்பிடப்படுகிறது. ஜாக்கி வாரத்திற்கு 2 முறை விரும்பியதை சாப்பிட்டாலும் இந்த நாட்களில் எடுத்து கொண்ட அதிகப்படியான கலோரிகளை எரிக்க ஒர்கவுட்டில் ஈடுபடும் போது 20 நிமிடங்கள் அதிகமாக பயிற்சி செய்வார்.