முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

valentine's day tips | பார்த்தவுடன் பிடித்துவிட்டது என்று நீங்கள் ஒரு நபரை நினைத்தால், ரொமாண்டிக்கான உறவுக்காக தன்னை அந்த மாதிரி போலியாக முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் உணர வேண்டும், டாக்ஸிக்கான நபர் என்ற அளவுக்கு, இவர்கள் உங்களை பலவிதங்களில் பாதிக்கலாம்.

 • 17

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  காதல் என்று வரும் பொழுது ஆண்கள் தனக்கு பிடித்த பெண்ணை எப்படியாவது காதலிக்க செய்து விடுவார்கள். முதல் பார்வையிலேயே பெரிதாக ஈர்க்க வைக்கும், அட்ராக்டிவ்வாக இருக்கும், சார்மிங்காக பேசும், நட்போடு இருக்கும் ஆண்கள் சில நேரங்களில் தங்களை போலியாக அவ்வாறு வெளிப்படுத்திக்கொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 27

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  பார்த்தவுடன் பிடித்துவிட்டது என்று நீங்கள் ஒரு நபரை நினைத்தால், ரொமாண்டிக்கான உறவுக்காக தன்னை அந்த மாதிரி போலியாக முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார் என்பதையும் நீங்கள் உணர வேண்டும், டாக்ஸிக்கான நபர் என்ற அளவுக்கு, இவர்கள் உங்களை பலவிதங்களில் பாதிக்கலாம். நீங்கள் தவறே செய்யவில்லை என்றாலும், உங்கள் மீது தான் எல்லா தவறும் இருக்கிறது என்று உங்களையே சொல்ல வைப்பார்கள். இவ்வாறு பலவகையான ஆண்கள் இருக்கிறார்கள். இந்த மாதிரியான ஆண்கள் மிக மிக ஆபத்தானவர்கள். இவர்களை பார்த்ததும் விலகி விடுங்கள், காதலிக்காதீர்கள்!

  MORE
  GALLERIES

 • 37

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  மிக மிக பெர்ஃபெக்ட் ஆன, மோஸ்ட் எலிஜிபில் சிங்கிள்: ஒரு சில நபர்களைப் பார்க்கும் போது, தோற்றம், படிப்பு, வேலை, பேச்சு, சிந்தனை, வாழ்க்கைமுறை என்று இவர்களிடம் எல்லாமே கச்சிதமாக இருக்கிறதே, ஏன் இன்னும் சிங்கிளாக இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும். அது நீங்களாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால், உங்களை அந்த நபர் அவ்வாறு நினைக்க வைக்கலாம். எல்லாமே ஈர்க்கும் வண்ணம், கச்சிதமாக இருக்கும் ஒரு ஆணுக்கு எப்படி இவ்வளவு நாள் எந்தப் பெண்ணும் கிடைக்கவில்லை என்று யோசித்துப் பாருங்கள். முதலில் ஜாலியாக இருக்கும் உறவு, கொஞ்சம் சீரியசாக ஆகும் போது, இத்தகைய நபர்கள் உங்களிடம் இருந்து விலகி விடுவார்கள்.

  MORE
  GALLERIES

 • 47

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  உடனே திருமணம் செய்ய தயார் என்ற ஆண் : தனக்கு ஏற்ற பெண் கிடைத்தால் அவரை பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளாமல் உடனடியாக திருமணம் என்று எந்த ஆண் முடிவு செய்கிறாரோ, அவரை பொறுத்தவரை உறவில் உணர்வுகள், கமிட்மென்ட் என்று எதுவுமே முக்கியமில்லை. திருமணம் என்பது மிக மிக எளிமையானது, அது எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சுலபமாக நடந்துவிடலாம் என்ற சிந்தனை அதிகமாக இருக்கும். காதல், ரொமான்ஸ் மற்றும் தேனிலவு முடிந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மீது இருக்கும் ஈர்ப்பு குறைந்துவிடும். மற்றொரு பெண்ணின் மீதான ஈர்ப்பு அதிகரிக்க துவங்கும், நீங்கள் மறந்து போவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 57

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  உங்களுடைய பணத்தில் சொகுசாக வாழ்பவர்கள் : பெண்கள் சம்பாதித்து ஆண்கள் வாழக் கூடாதா என்ற கேள்வி சமீபத்தில் அதிகமாகி இருக்கின்றது! அப்படி இருக்கலாம், ஒன்றும் தவறில்லை. ஆனால், ஒரு சிலர் உறவுகளில் மிக மிக கம்ஃபர்ட் சோனுக்கு வந்த பிறகு, உங்களுடைய பணத்தில், உங்களுடைய வசதிகளில் குளிர்காய்ந்து ஜாலியாக வாழ தொடங்கி விடுவார். ஆனால், இந்த உறவில் பெரும்பாலும் ஆணின் பொய் தான் அடித்தளமாக இருக்கும். தனக்கு மிக விலை உயர்ந்த பிராண்டுகளை மட்டும் தான் பயன்படுத்துவேன், இத்தகைய ஆடைகளைத்தான் அணிவேன், இதெல்லாம்தான் பிடிக்கும் என்று தன்னுடைய உயர் ரசனைகளை வெளிப்படுத்தி பெண்களை ஈர்ப்பார்கள். ஆனால் இவ்வாறு இருப்பவர்களிடம் பணமே இருக்காது என்பதுதான் உண்மை.

  MORE
  GALLERIES

 • 67

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  அம்மா கிழித்த கோட்டை தாண்டாதவர்கள் : அம்மா மீது அன்பும் மரியாதையும் இருப்பது ஒரு பக்கம். ஆனால், ஒரு சில ஆண்கள் அம்மா கிழித்த கோட்டை தாண்ட மாட்டார்கள். இவர்கள், எல்லாவற்றுக்குமே தன்னுடைய அம்மாவைச் சார்ந்து இருப்பார்கள். இன்னொரு பெண் இவர்கள் வாழ்வில் வந்தால், அந்தப்பெண்ணுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது. அம்மா சொல்வது தான் சரி, அம்மா சொல்வதை மீறக் கூடாது, எதுவாக இருந்தாலும் அம்மாவிடம் கேட்க வேண்டும் என்று தம்பதிகளின் உறவில் மூன்றாம் நபராக அம்மாவும் இணைக்கப்படுவர்.

  MORE
  GALLERIES

 • 77

  காதலர் தினம் 2023: பெண்களே உஷார்.. இந்த மாதிரியான ஆண்களின் காதல் வலையில் மட்டும் விழுந்துடாதீங்க.!

  உறவை சீரியசாக எடுத்துக் கொள்ளாதவர்கள் : எல்லா இடங்களிலுமே சீரியஸாக நடந்து கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால், காதல், திருமணம், உறவுகளின் பிணைப்பு, பிரச்சனை என்று வரும் பொழுது ஒரு சில நேரங்களில் தீவிரமாக எடுத்துக்கொண்டு அதன்படி நடவடிக்கை வேண்டும். சில ஆண்கள் எப்போதுமே, எதையுமே சீரியஸாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். உங்களுக்கு பெரிய உதவி தேவைப்பட்டால் கூட, உதவியாகவோ ஆதரவாகவோ செயல்பட மாட்டார்கள். இந்த மாதிரியான நபர்கள் பெரும்பாலும் சாகச பிரியர்களாக இருப்பார்கள், பயணங்களும் பார்ட்டிகளும் இவர்களுக்கு மிக மிக விருப்பமாக இருக்கும். உங்களுடைய குழந்தைத்தன்மையை இவர்கள் வெளிக்கொண்டு வர முடியும் என்பது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், சீரியஸ் ஆன எந்த தருணத்திலும் நீங்கள் தனியாகத்தான் இருக்கவேண்டும். ஏனென்றால், இவர்களுக்கு தீவிரமான ஒரு சூழ்நிலையை கையாள்வது எப்படி என்று தெரியாது.

  MORE
  GALLERIES