ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

Christmas 2022 : இந்த ஒரு நாளுக்காக பல நாட்களாக காத்திருக்கும் குழந்தைகளும் உள்ளனர். இதனால், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசுகளை பெற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊக்குவிக்கிறார்கள். நல்ல குழந்தைகளாக இருந்தால் தான், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசுகளைப் பெறுவார்கள் என்றும் கூறுவார்கள்.

 • 17

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  Christmas 2022 : கிறிஸ்துமஸின் போது குழந்தைகள் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நபர் சாண்டா கிளாஸ் தான். கிறிஸ்துமஸ் என்றாலே சாண்டா கிளாஸ் தான் மிகவும் அபிமான மற்றும் முக்கிய நபராக கருதப்படுவார். 8 கலைமான்களை கொண்ட வண்டியில் திறந்த பனியில் சறுக்கி ஓடும் வாகனத்தில் இவர் சவாரி செய்வார் என்பன போன்ற பல தகவல்களை சாண்டா பற்றி கேள்விப்பட்டிருப்போம். குறிப்பாக சாண்டா கிளாஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தா, கிறிஸ்துமஸ் நாளன்று நமக்கு பரிசுகளை கொண்டு வருவார் என்கிற நம்பிக்கையுடன் நாம் காத்திருப்போம்.

  MORE
  GALLERIES

 • 27

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  இந்த ஒரு நாளுக்காக பல நாட்களாக காத்திருக்கும் குழந்தைகளும் உள்ளனர். இதனால், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசுகளை பெற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஊக்குவிக்கிறார்கள். நல்ல குழந்தைகளாக இருந்தால் தான், கிறிஸ்துமஸ் தாத்தாவிடம் இருந்து பரிசுகளைப் பெறுவார்கள் என்றும் கூறுவார்கள். உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் யார்? இவரை பற்றிய வரலாறு என்ன? என்பன போன்ற பல தகவல்களை இனி பார்ப்போம்.

  MORE
  GALLERIES

 • 37

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய வரலாறு
  புராணக்கதைகளின்படி, கிறிஸ்துமஸ் தாத்தா ஆண்டு முழுவதும் குழந்தைகளுக்கான பொம்மைகளை உருவாக்கும் ஒரு ஜாலியான நபராக கருதப்படுகிறார். முதலில் இவர் குழந்தைகளிடமிருந்து அவர்களுக்கு பிடித்த பரிசுகளைக் கோரி கடிதங்களைப் பெறுவார் என்று கூறப்படுகிறது. இவர் வட துருவத்தில் வசிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 47

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  இந்த வெள்ளை தாடி, மகிழ்ச்சியான மனிதரின் கதை துருக்கியில் கி.பி 280-இல் தொடங்குகிறது. செயிண்ட் நிக்கோலஸ் என்ற துறவி ஏழைகளுக்கும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் உதவுவதற்காக பல நன்மைகளை செய்வார் என்று தெரிகிறது. இந்த துறவி தனது முழு செல்வத்தையும் ஏழைகளுக்கு உதவ பயன்படுத்தி உள்ளார். பின்னாளில் இந்த துறவி குழந்தைகள் மற்றும் மாலுமிகளின் பாதுகாவலராக மாறினார் என்று சில புராணங்கள் கூறுகிறது.

  MORE
  GALLERIES

 • 57

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  மற்றொரு கதை, நெதர்லாந்தில் இருந்து மக்கள் புதிய உலக காலனிகளுக்கு குடிபெயர்ந்தபோது, ​​அங்கு சாண்டா கிளாஸ் பிறந்ததாக கூறுகின்றனர். இந்த கதையில், செயிண்ட் நிக்கோலஸ் டச்சு பகுதியை சேர்ந்தவராக கூறுகின்றனர். இவற்றின் நல்ல மனப்பான்மை கொண்ட மனதால் பலருக்கும் உதவி வந்துள்ளார். இந்த கதைகள் 1700-களில் அமெரிக்காவில் பல இடங்களில் பரவின. இறுதியில் இவர் இறந்த பிறகு, இவருக்கு சாண்டா கிளாஸ் என பெயர் வைக்கப்பட்டது.

  MORE
  GALLERIES

 • 67

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  சரி, சாண்டா எப்போதும் ஒரு வட்டமான வயிற்றுடன் இருப்பதாக பலர் கருதுகின்றனர். ஆனால், வாஷிங்டன் இர்விங் என்கிற ஒரு எழுத்தாளர், 1809 ஆம் ஆண்டில், "நிக்கர்பாக்கர்ஸ் ஹிஸ்டரி ஆஃப் நியூயார்க்" என்ற புத்தகத்தில் சாண்டாவின் உருவத்தை குறித்து, "குழாய் புகைபிடிக்கும், மெலிதான உருவம், நல்ல குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் மனிதர், மான்களை கொண்ட வாகனத்தில் பறப்பார்" என்று சித்தரித்தார். எனவே, உண்மையாக கிறிஸ்துமஸ் இப்படி தான் இப்பர் என்று சரியான வரலாறு கிடையாது. இருப்பினும் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில், கிறிஸ்துமஸ் தாத்தாவை மக்கள் எல்லோரும் கொண்டாடி வருகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 77

  Santa Claus | உண்மையில் கிறிஸ்துமஸ் தாத்தா இருக்கிறாரா..? அவரை பற்றிய வரலாற்று உண்மைகள் உங்களுக்காக...

  எது எப்படியோ, கிறிஸ்துமஸ் தாத்தா என்பவர் இல்லாதவர்களுக்கு உதவ கூடிய ஒரு நல்ல மனம்கொண்ட மனிதராக உள்ளார் என்பதை நாமும் கிறிஸ்துமஸ் அன்று ஏழை எளியவர்களுக்கு உதவி இந்த 2022 கிறிஸ்துமஸை இனிமையாக கொண்டாடலாம்.

  MORE
  GALLERIES