பெர்பர்கள் என்ற ஒரு இனம் வட ஆப்பிரிக்கா-அரபு பகுதியின் வழித்தோன்றல்களாக இருக்கின்றனர். இன்று பல நாடுகளில் சிதறிக்கிடக்கும் இந்த இனமக்கள் பிரதானமாக மொராக்கோவில் குடியேறியுள்ளனர். மெஹந்தி கலை, மட்பாண்டங்கள், நெசவு மற்றும் காலை பொருட்கள் வடிவமைப்பு ஆகியவற்றில் அவர்களின் மரபுக்காக உலகம் முழுவதும் பிரபலமானவர்கள். இவர்களது பெர்பர் டீக்கு தனி ரசிகர் பட்டாளமே உலகத்தில் உண்டாம்
நுபியர்கள் கிமு 3500 க்கு முந்தைய உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றின் வழித்தோன்றல்களாம், 'நாகரிகத்தின் தொட்டில்களில்' ஒன்றாக அறியப்படும் நுபியா, நவீன எகிப்து மற்றும் சூடான் வழியாக நைல் நதியின் பெரும்பகுதியைச் சுற்றியுள்ள பகுதியின் பழைய பெயராகும். பிற்காலத்தில் எகிப்து கைப்பற்றப்பட்ட பின்னர் இவர்களது பாரம்பரியம் மங்கத்தொடங்கியது. இன்று வெகு சில இடங்களில் மட்டுமே இவர்களது கலாச்சார எச்சங்களை காணமுடியும்.
சாமா-பஜாவ், (Sama-Bajau)அல்லது 'கடல் நாடோடிகள்' என்பது தென்கிழக்கு ஆசியா முழுவதும் காணப்படும் ஆஸ்ட்ரோனேசிய பழங்குடியினரின் தொகுப்பாகும். அவர்கள் தங்கள் தனித்துவமான கடல்வழி வாழ்க்கை முறைக்காக 'கடல் நாடோடி' என்ற பெயரைப் பெற்றனர்.அவர்கள் எப்போதும் சிறிய படகுகளில் வாழ்கின்றனர், புயல்களின்போது பொருட்கள் தேவை அல்லது தங்குமிடத்திற்காக மட்டுமே கரைக்கு வருகிறார்கள்.
கிழக்கு ஆப்பிரிக்க பழங்குடியினரான மாசாய்( MAASAI ) மக்கள் இசை கருவிகள் ஏதும் இன்றி பாடல் பாடி நடனம் ஆடும் வழக்கத்தைக் கொண்டவர்கள். இன்றும் தங்கள் மரபுகளையும் வாழ்க்கை முறைகளையும் பாதுகாக்கும் சில பழங்குடியின மக்களில் இவர்களும் ஒன்றாகும். அவர்களின் இருப்பு நமது மானுடவியல் கடந்த காலத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது,
"நல்ல குதிரைகளும் கடுமையான கழுகுகளும் கசாக்கின் இறக்கைகள்" என்ற சொல்லாடல் ஒன்று உண்டு.. பண்டைய துருக்கிய பழங்குடியினரின் சந்ததியினர் மற்றும் மங்கோலியாவின் மிகப்பெரிய சிறுபான்மையினரில் ஒருவரான கசாக்(KAZAKHS) இனம் ஒரு வரை அரை-நாடோடி மக்களைக் கொண்டது. பணக்கார, தனித்துவமான இன அடையாளத்தைக் கொண்டுள்ள இது சோவியத் ஆட்சியால் சிதைக்கப்பட்டது. அவர்களின் மக்கள் தொகையில் பாதி பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரம் ரஷ்ய கம்யூனிசத்தைச் சார்ந்தது. சோவியத் வீழ்ச்சிக்குப் பிறகு, கசாக் இனத்தின் அடையாளம் குழப்பமாகவும் செயலற்றதாகவும் இருந்தது. இப்போது இந்த கலாச்சார அடையாளத்தை மீண்டும் கண்டறிய ஒரு இயக்கம் செயல்பட்டு வருகிறது.
ஆண்டியன் ஹைலேண்ட்ஸின் கெச்சுவா(QUECHUA) மக்கள் புகழ்பெற்ற இன்கா பேரரசுக்கு முந்தியவர்கள் மற்றும் இன்னும் வலுவான அடையாள உணர்வைக் கொண்டுள்ளனர்.கெச்சுவா மக்கள் பிராந்தியம் மற்றும் பேச்சுவழக்குகளைப் பொறுத்து வேறுபட்டாலும், பெரிதளவில் பெரு நாட்டில் காணப்படுகின்றனர். இயற்கை சாயம் ஏற்றிய உடைகள், அல்பாகா(ஒரு வகை ஆடு) கம்பளி, இவர்களது புகழை பறைசாற்றும்.
இந்தோனேசியாவில் வாழும் பாலினீஸ் மக்கள் பெரும்பாலும் அகமா இந்து தர்மம் எனப்படும் இந்து மதத்தின் ஒரு வடிவத்தை பின்பற்றுகிறார்கள். அது போக இவர்கள் நம்பிக்கை பௌத்த மற்றும் யார்கை-விலங்கியல் சார்ந்த நம்பிக்கைகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது. முக்கிய இந்துக் கடவுள்கள் வழிபடப்பட்டாலும், உள்ளூர், விவசாய மற்றும் மூதாதையர் தெய்வங்களுக்கு சமமான கவனம் செலுத்தப்படுகிறது.