வாழ்வில் அனைவரும் ஏதேனும் ஒரு குறிக்கோளை அடையத்தான் ஓடிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அனைவராலும் அந்த குறிக்கோளை அடைந்து திருப்தி அடைய முடிந்ததா என்று கேட்டால் கேள்விக்குறிதான். ஆனால் சில குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் இதில் விதிவிலக்கு. அவர்கள் தங்கள் நிர்ணயத்தை இடத்தை அடைந்து வாழ்வில் வெற்றி பெறுவதற்கு சில குறிப்பிட்ட பழக்கவழக்கங்களை கடைபிடிக்கின்றனர். அது மனதளவிலோ அல்லது வாழ்க்கையிலோ தன்னைத்தானே வடிவமைத்துக் கொண்டு அந்த இலக்கை நோக்கி செல்கின்றனர். அவ்வாறு வாழ்வில் வெற்றி அடைந்த மனிதர்களுக்கிடையே அவர்கள் பொதுவாக கடைப்பிடிக்கும் பழக்கங்களைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
1. இதுவும் கடந்து போகும் : இவர்கள் வெற்றி வரும் போது அதிகமாக ஆடுவதும் அல்லது தோல்வியின் போது மிகவும் துவண்டு விடுவதும் இவர்களிடம் இருக்கவே இருக்காது. வெற்றியோ, தோல்வியோ எப்போதும் ஒரே மனநிலையிலேயே இருப்பர். மிகப்பெரிய அளவில் தோல்வி ஏற்பட்டாலும் இது நிரந்தரமானது இல்லை என்பதை புரிந்து கொண்டு வெற்றியை பெறுவதற்கு இன்னும் அதிகமாக வேலை செய்வார்.
2. காரியங்களை தள்ளிப் போடுவது என்பதை செய்யவே மாட்டார்கள் : ஒரு வேலையை எடுத்துக் கொண்டால் அதனை அப்போதே செய்து விட வேண்டும் என்பதுதான் இவர்களது முக்கிய நோக்கமாக இருக்கும். இந்த வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் அல்லது இரண்டு வாரம் கழித்து செய்து கொள்ளலாம் என்று முக்கியமான வேலைகளை தள்ளிப் போடுவதும் அல்லது அதனை மற்றவர்களின் தலையில் கட்டுவதும் இவர்கள் அகராதியிலேயே கிடையாது.
6. தேவையான நேரத்தில் உதவி கேட்பது : தன்னால் அனைத்தையும் தன்னந்தனியாக செய்து முடிக்க முடியும் என்று தலைகனத்தோடு இல்லாமல் தேவைப்பட்ட நேரங்களில் தகுதியானவர்களிடம் உதவி கேட்பதற்கு சற்றும் தயங்க மாட்டார்கள். அது தன்னைவிட சிறியவரோ அல்லது பெரியவரோ அதை பற்றியவர்களுக்கு கவலை இல்லை. குறிப்பிட்ட காரியத்தை செய்து முடிப்பதிலேயே இவர்களது முழு கவனமும் இருக்கும்.