

முகத்தில் டல் மேக்அப் போட்டாலும் டாலடிக்கும் விதவிதமாக லிப்ஸ்டிக் அப்ளை செய்தால் போதும் முகம் பிரகாசமாக ஜொலிக்கும். மேக் அப்பே போடாமல் லிப்ஸ்டிக் மட்டும் போட்டாலும் போதும் முகத்திற்கு அழகுக் கூடிவிடும். இப்படி எப்போதும் கைக்கொடுக்கும் லிப்ஸ்டிக்கை பெண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அதிலும் இந்த ஷேடுகளை வைத்துக்கொள்வது எப்போது வேண்டுமானாலும் உதவலாம்.


கிளாசிக் ரெட் லிப்ஸ்டிக் : சிவப்பு என்றாலே ராயல்தான். பொதுவாக அனைத்து சரும வகைகளுக்கும் ஏற்ற நிறம். இதை அணிந்து கொள்வதால் உங்கள் முகம் பளிச்சென தெரியும். விரைவில் நிறம் மங்காமலும் இருக்கும். ஆடைக்கு ஏற்ற வகையில் குறைவாக அல்லது அடர்த்தியாகவும் விருப்பம் போல் அணிந்து கொள்ளலாம்.


பளபளப்பு தரும் ஆரஞ்சு: ஆரஞ்சு நிறத்தில் பீச், கிரீம் பீச் என பல ஷேடுகள் கிடைக்கின்றன. இவற்றில் சரியானதை தேர்வு செய்து உங்கள் முகத்திற்கு ஏற்ற வகையில் அணிந்து கொள்ளலாம். மினிமலிஸ்டிக்காக மேக்கப் செய்வோருக்கு இந்த ஷேடுகள் ஏற்றது. அனைத்துவிதமான சருமத்திற்கும் பொருந்தும்.


ஷேடுகளில் சிறந்த பிரௌன் நிறம் : பழுப்பு நிறம் வெள்ளையான சருமத்திற்கு ஏற்றது. இதன் அனைத்து ஷேடுகளையும் முயற்சி செய்து பார்க்கலாம். சாக்லேட் பிரௌன், குக்கீஸ் பிரௌன், மௌவே என பல ஷேடுகள் பிரௌன் நிறத்தில் கிடைக்கின்றன. குறைந்த மேக்கப் செய்து லிப்ஸ்டிக்கை ஹைலைட் செய்து பாருங்கள். உங்களை நீங்களே நேசிப்பீர்கள்.


கம்பீரம் தரும் ஊதா நிறம்: கண்களுக்கு அதிக மேக்கப் போடுவோருக்கு அடர் ஊதா நிற லிப்ஸ்டிக் பொருத்தமானது. ஒரே நிறத்தில் மேச்சிங் உடை அணிவோருக்கு (monochrome outfit) அல்லது லைட் ஷேட் உடைகளுக்கு அடர் நிறத்தில் ஊதா லிப்ஸ்டிக் அணிவது எடுப்பாக இருக்கும். கம்பீரமான தோற்றத்தை அளிக்கும். இரவொளியில் உங்கள் உதடுகளை எடுப்பாக காட்டும்.


பொலிவு தரும் கருப்பு நிறம் : வியத்தகு தோற்றத்தைப் பெற கருப்பு நிற லிப்ஸ்டிக் ஷேடுகள் ஏற்றது. இரவு நேர கொண்டாட்டத்தில் பளபளப்பான தோற்றத்தையும் அதே சமையம் விரைவில் நிறம் மங்காமலும் இருக்கும். லிப்ஸ்டிக்கின் அடர்த்தியை விருப்பம் போல் அணிந்து கொள்ளலாம்.